archivewhatsapp

Indiatechnologyworld

IMO பயன்படுத்தும் இளைஞர்களே உஷார்… உங்களை குறிவைக்கிறது பாலியல் கும்பல்

இதுகுறித்து குவைத்தில் பணிபுரிந்து வரும் சபியுல்லா என்ற பொறியாளர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ…

BackgroundIndiatechnology

“வாட்ஸ்அப்” வீடியோ கால் மூலம் தகவல் திருடிய இஸ்ரேல்… ஷாக் ரிப்போர்ட்!

‘பெகாஸஸ்’ மூலம் முக்கியப் பிரமுகர்களை உளவு பார்த்த பா.ஜ.க.? வாட்சப் நிறுவனம் வீசிய அதிர்ச்சி குண்டு.

இந்தியாவில் 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பு வரை தலித் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள்,கல்வியாளர்கள் மற்றும் வக்கீல்கள் என 24-க்கும் அதிகமான முக்கியப் பிரமுகர்கள் வாட்சப் மூலம் உளவு பார்க்கப்பட்டதை வாட்சப் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

உளவு பார்ப்பதற்காக இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. நிறுவனம் தயாரித்த ‘பெகாஸஸ்'(Pegasus) என்ற மென் பொருள் பயன்படுத்தப்பட்டதாக வாட்சப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆன்ட்ராய்டு, ஆப்பிள், பிளாக்பெர்ரி உள்ளிட்ட முக்கிய இயங்கு தளங்களில்(Operating system) ஊடுருவி செயல்படும் வகையில் பெகாஸஸ் மென் பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக வாட்சப் கூறியுள்ளது.

பெகாஸஸ் ஊடுருவியுள்ள ஒரு செல்போனின் வாட்சப்பில் வீடியோ கால் செய்தாலே மொத்த தரவுகளையும் அபேஸ் பன்னிவிட முடியுமாம். குறிப்பிட்ட அந்த வாட்ஸப் பயன்பாட்டாளர் போனை எடுக்காவிட்டாலும் கூட அவருடைய கைபேசியில் உள்ள ரகசிய எண்கள், முக்கியத் தகவல்கள், நாள்காட்டியில் குறித்துள்ள நிகழ்ச்சிகள் வரை அனைத்து தகவல்களையும் திரட்டிவிட முடியும் என வாட்சப் நிறுவனம் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி குண்டுகளை வீசி உள்ளது.

பெகாஸஸை உறுவாக்கிய என்.எஸ்.ஓ. நிறுவனத்தின் மீது அமெரிக்க நீதி மன்றத்தில் வாட்சப் நிறுவனம் வழக்கு ஒன்றையும் பதிவு செய்துள்ளது. அதில் உலகம் முழுவதும் 1,400 முக்கியத் நபர்களின் வாட்சப் கணக்குகள் பெகாஸஸ் மூலம் உளவு பார்க்கப்பட்டு உள்ளதாக வாட்சப் நிறுவனம் குற்றம் சாட்டி உள்ளது.

குற்றச்சாட்டு குறித்து பதிலளித்துள்ள என்.எஸ்.ஓ. நிறுவனம் பெகாஸஸ் மென்பொருளை குறிப்பிட்ட சில நாடுகளின் ‘அரசுகளுக்கு’ மட்டுமே விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளது.

இதனால் இந்தியாவில் முக்கிய நபர்களை உளவு பார்த்தது பாரதிய ஜனதா கட்சியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியாவில் பொதுத் தேர்தலுக்கு முன்புவரை மட்டுமே முக்கியப் பிரமுகர்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளதால், நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்காக பா.ஜ.க. இந்த சூழ்ச்சி வேலையை செய்து இருக்கலாம் என்ற ஐயப்பாடு அதிகரித்துள்ளது.

Source: Times of India

தமிழாக்கம்: நியூசு.இன்

articlefact checkIndiatechnology

வாட்ஸ் ஆப் பொய் வெறுப்பு பிரச்சாரத்தில் உயர்சாதியினர் முதலிடம் – அதிர்ச்சியளிக்கும் ஆய்வு

Image Source: Cartoonistsatish.com

இந்தியாவில் பல்வேறு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் பொய்யான தகவல்களை பரப்புவதில் உயர்சாதியினரும், இடைநிலை சாதியினரும் முன்னிலை வகிப்பதாக லண்டன் பொருளாதாரப் பள்ளித் தெரிவித்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு லண்டன் பொருளாதாரப் பள்ளியும், வாட்சப் நிறுவனமும் இணைந்து இந்தியாவில் போலிச் செய்திகள் பரப்பப்படுவது குறித்த ஆய்வை முன்னெடுத்தனர்.

கர்நாடகா, மகராஸ்டிரா, மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் என நான்கு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 250 வாட்சப் பயனாளர்களிளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மிக நீண்ட நேர்காணல் மூலம் திரட்டப்பட்ட தகவல்களைக் கொண்டு இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில், “தொழில்நுட்ப அறிவுடைய, இளம் அல்லது நடுத்தர வயதுடைய உயர் அல்லது இடை சாதி ஆண்கள் தவறான மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் போலிச் செய்திகளைப் பரப்புவதில் அதிக ஆர்வம் காட்டுவதாக கூறப்பட்டு உள்ளது”.

போலி வெறுப்புச் செய்திகளை உருவாக்கி பரப்பிவிடுவதற்காக தொழில்நுட்ப அறிவுகொண்ட உயர் சாதி அல்லது இடை சாதி இளைஞர்கள் வாட்சப் குழுமங்களை நடத்துவதாகவும் அவை செய்திகளை பகிர்வதில் முதலிடத்தில் இருப்பதாகவும் லண்டன் பொருளாதாரப் பள்ளி கூறுகிறது.

உயர் அல்லது இடை சாதி இளைஞர்களால் பரப்பப்படும் தவறான செய்திகள் அனைத்தும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் மீது வெறுப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளதாகவும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வெறுப்புச் செய்திகளைப் பரப்பும் பொதுமக்கள் தங்களது வெறுப்புக் கொள்கையின் மீதுள்ள அதிகமான பற்றால் செய்திகளில் உள்ள தவறான மற்றும் போலியான தகவல்களை பார்க்கத் தவறிவிடுவதாகவும், இதனால் பல சமயங்களில் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்துவிடுவதாகவும் தெரிவிக்கிறது அந்த ஆய்வு.

அதே நேரத்தில் போலிச் செய்திகள் மற்றும் வெறுப்பை தூண்டக் கூடிய செய்திகளை சாதி அடுக்கில் கீழ்நிலையில் உள்ளவர்களும், முஸ்லிம்களும், தலித்களும், பெண்களும், கிராமப்புறங்களில் உள்ளவர்களும், குறைந்த தொழில்நுட்ப அறிவு கொண்டவர்களும் பகிர விரும்புவதில்லை என்று தெரிவித்துள்ளது.

மேலும், போலி வெறுப்புச் செய்திகள் அறியாமையாலும், தொழில்நுட்ப அறிவின்மையாலும் பரப்பப்படுவதை காட்டிலும் தவறான எண்ணம் மற்றும் சித்தாந்த்தின் அடிப்படையில் வேண்டுமென்றே பரப்பப்படுவதாக சுட்டிக்காட்டி உள்ளது லண்டன் பொருளாதாரப்பள்ளியின் ஆய்வு முடிவு.

இந்தியாவில் கடந்த 2018-ம் ஆண்டு மட்டும் வெறுப்பைத் தூண்டும் போலிச் செய்திகளால் 50-க்கும் அதிகமானோர் அடித்துக் கொல்லப்பட்டு உள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலனவர்கள் முஸ்லிம்களும், தலித் மக்களும் ஆவார்கள்.

மதச்சார்பின்மையை சட்டப் புத்தகத்தின் முன்னுரையிலும், தீண்டாமைமையை பாடப் புத்தகத்தின் முதல் பக்கத்திலும் வைத்திருப்பதால் இந்த அவல நிலை மாறிவிடாது.

இந்தியாவில் இந்து அல்லாதவர்களை வாழ அனுமதித்திருப்பதே மதச்சார்பின்மை என்றும், தலித்கள் செருப்பு அணிவதை பொறுத்துக் கொள்வதும், கல்வி கற்க அனுமதிப்பதுமே தீண்டாமை ஒழிப்பு என்றும் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு இந்திய குடிமகன் தான் விரும்பும் எந்த மதத்தையும் பின்பற்றும் உரிமை உடையவன் என்பதையும், குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுவதால் ஒரு நபரின் அடிப்படை உரிமைகள் எந்த வகையிலும் குறைந்துவிடாது என்பதையும் அவர்ளுக்குப் புரியவைக்க வேண்டும். பிறப்பால் உயர்வு, தாழ்வு இல்லை என்னும் உண்மையை உணர்த்தி அனவரையும் சமமாக நடத்துவது அடுத்தவருக்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்பதை உணரச்செய்ய வேண்டும்.

ஒரு இந்துவுக்கு இந்தியாவின் மீது இருக்கும் உரிமைகள் அனைத்தும் துளி குறையாது மாற்று மதத்தினருக்கும் உண்டு என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். பல்வேறு கலாச்சாரங்களை, வேறுபாடுகளை, வழிபாடு முறைகளை கொண்டவர்களை அரவணைத்து அன்பு செலுத்தும் வழி முறைகள் கற்பிக்கப்பட வேண்டும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக சுயநலத்திற்காக, தனிநபர் ஆதாயத்திற்காக சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் வெறுப்பை வளர்ப்பவர்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற போலிச் செய்திகள் பரப்பப்படுவதும், அதனால் உயிர்கள் பறிபோவதும் நிறுத்தப்படும்.

ஆக்கம்: தி வயர்.இன்

தமிழாக்கம்: நியூசு.இன்