Newsu Tamil
crime தமிழ்நாடு செய்திகள் மறைக்கப்பட்டவை

திருவள்ளூரில் மேலும் ஒரு பெரியார் சிலை சேதம்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலை நிறுவப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அங்கு வந்த பாசிச பயங்கரவாதிகள் பெரியாரின் மார்பளவு வெண்கல சிலையின் முகம் மற்றும் கண்ணாடியை சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

தந்தை பெரியார் சிலையினை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார் என்று மீஞ்சூர் போலீசார் தேடி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாஜக தேசிய செயலாளர் ட்விட்டரில் பெரியார் சிலையை சேதப்படுத்துவோம் என போட்ட பதிவின் தொடர்ச்சியாக 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன.

அண்மையில் கோவையில் பெரியார் சிலை மீது காசிச்சாயம் பூசப்பட்டது. அதில், பாரத் இந்து சேனா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டான். அதை தொடர்ந்து புதுச்சேரியில் எம்.ஜி.ஆர்.சிலை மீது காவி துண்டு போடப்பட்டது. பின்னர் கள்ளக்குறிச்சி பெரியார் நீர் வீழ்ச்சி பெயர் பலகையில் காவிச்சாயம் பூசப்பட்டது. இன்று பேரறிஞர் அண்ணாவின் சிலை சேதப்படுத்தபட்டது. அதே நாளில் பெரியாரின் சிலையும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.