Newsu Tamil
பின்னணி மறைக்கப்பட்டவை

அதிகார போதையில் ஆடிக்கொண்டிருக்கும் பா.ஜ.க .!

மத்தியில் ஆளும் பாஜக அரசு கொரோனா கால ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி சிஏஏ மற்றும் காஷ்மீர் பிரச்சனைகளை எதிர்த்து எதிர்த்து போராடிய  சமூக ஆர்வலர்களையும், பல்கலைக்கழக மாணவர்களையும், பேராசிரியர்களையும், அறிஞர்களையும், இயக்க நிர்வாகிகளையும் தொடர்ந்து கைது செய்து வருவது சர்வதேச அளவில் பேசு பொருளாக மாறி இந்தியாவிற்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களின் கைதுகளுக்கு எதிராக இந்தியாவில் உள்ள பலரும் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். கைதுகள் தொடர்ந்து கொண்டே இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது காஷ்மீர் பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்ததால் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவரும், ஜேஎன்யூ பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவருமான சாஜித் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் ஒழித்து வருகின்றன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேம்பஸ் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் தமிழ் மாநிலத் தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள்,

“கஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்களை பற்றி டிவிட்டரில் கேள்வி எழுப்பினாலோ (அ) கஷ்மீரை பற்றி பேசினாலோ தேச விரோத செயலாக சித்தரிக்கும் பாசிசத்தின் கோர முகம்.

RSSன் ஹிந்துத்துவ சிந்தனையை செயல்படுத்தி கொண்டிருக்கும் டெல்லி காவல்துறைக்கு எனது வன்மையான கண்டனங்கள்.

டெல்லி காவல்துறை உடனடியாக எங்கள் தேசிய தலைவர் சாஜித் அவர்களின் மீது பதியப்பட்ட வழக்கை திரும்பப்பெற வேண்டும்.”

என குற்றம் சாட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து NIA வினால்  பேராசிரியர் ஹனி பாபு கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதுபோன்ற தொடர் கைதுகளால் நாட்டு மக்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர். அதிகார வர்க்கத்தில் ஆடிக்கொண்டிருக்கும் பாஜக அரசு ஒரு நாள் அழிவைத் தானே தேடிக் கொள்ளும் என கூறி வருகின்றனர்.