Newsu Tamil
weather தமிழ்நாடு செய்திகள் மறைக்கப்பட்டவை

ஒரு நாள் மழைக்கு தாங்காத சென்னை… மிதந்த கார்கள்..!

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மதியம் மற்றும் மாலை நேரத்தில் மழை வெளுத்து வாங்கியது.

தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதிகளில் சாலைகள் வெள்ளம்போல் காட்சி தருகின்றன. சென்னை பல்லாவரத்தில் சாலையில் சூழ்ந்துள்ள மழை நீர் மற்றும் சாலையோரம் மிதக்கும் கார்களின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சென்னை பெருவெள்ளத்துக்கு பிறகு மழை நீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டு பேரிடர் தவிர்க்கப்படும் என அரசு உத்திரவாதம் அளித்தது. ஆனால், நிலைமை எதுவும் மாறவில்லை. ஆக்கிரமிப்புகள் எதுவும் அகற்றப்பட்டதாக தெரியவில்லை.

பெரும்பாலும் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் தான் அன்றும் மூழ்கின. இன்றும் சிறுமழைக்கு கூட தாக்குபிடிக்க முடியாத சூழலில் உள்ளன.