Newsu Tamil
அரசியல் தமிழ்நாடு செய்திகள் பின்னணி மறைக்கப்பட்டவை

OBC இட ஒதுக்கீடு தீர்ப்பு – பாஜகவின் இரட்டை வேட பொய் அம்பலம்!

OBC இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஏற்பட்ட விவாதங்களில், இடஒதுக்கீட்டிற்கு எதிராக பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்கள் பேசி வந்தனர். இந்த நிலையில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் OBC இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தவுடன் திடீரென பாஜக பல்டியடித்து தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்தது.

இதற்கிடையே பாஜக இந்த விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்துள்ளதாக சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “OBC வழக்கில் மத்திய பா.ஜ.க அரசின் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்(Affidavit)
தமிழகத்தின் அனைத்துக்கட்சிகளும் கோரியிருந்த OBC இடஒதுக்கீட்டிற்கு கடுமையான எதிர்ப்பை பதிவுசெய்துவிட்டு,
பொதுவெளியில் பா.ஜ.கவின் நிலைப்பாட்டால்தான் இத்தீர்ப்பு கிடைத்தது என்று இரட்டைவேடம் போடுகிறது பா.ஜ.க.

இரட்டைவேடத்தை எடுத்துக்காட்ட, தீர்ப்பிலிருந்து சில பத்திகள் :
பக்கம்63, பத்தி 24ல், இவ்ஒதுக்கீடானது பெருவாரியான மக்களுக்கு, மருத்துவ சமுதாயத்திற்கு, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் என்ற வாதத்தை முன்வைக்கிறது மத்திய அரசு.. ( “… 24. It is submitted that if these writ petitions are allowed, medical admissions across India would get greatly affected and interest of the medical community and the public at large would be greatly affected..)

பக்கம்63:பத்தி 25: பொதுநலன் கருதி,மருத்துவ மாணவர் சேர்க்கையில் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு OBC ஒதுக்கீடு கோரும் இம்மனுவானது தள்ளுபடி செய்யப்படவேண்டும் என்று மத்திய பா.ஜ.க அரசு கோருகிறது(25. It is submitted that in larger public interest too,this batch of writ petitions deserve to be dismissed,to prevent anomalous situations and confusions from arising in medical admissions in India”..
இப்படி, OBC ஒதுக்கீட்டிற்கு நீதிமன்றத்தில் கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்துவிட்டு, அனைத்துக்கட்சிகளின் மனுவையும் தள்ளுபடி செய்யவேண்டும் என்று வாதாடிவிட்டு “… மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையிலேயே தீர்ப்பு தரப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தமிழக பா.ஜ.க அறிக்கை வெளியிட்டிருப்பது பா.ஜ.கவின் “இரட்டை வேடம்” மற்றும் “பச்சைப்பொய்யை” தெளிவாகத் தோலுரித்துக் காட்டுகிறது.

உண்மையிலேயே, OBC ஒதுக்கீடு குறித்து பா.ஜ.கவிற்கு அக்கறை இருக்குமானால்,
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு, விளக்கம் கேட்டு வழக்கு என இழுத்தடிக்காமல் OBC ஒதுக்கீட்டை உடனடியாக செயல்படுத்த முன்வரவேண்டும். 3 மாதம் காத்திருக்காமல், விரைந்து செயல்பட்டால், இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் சேர்க்கையில்கூட இதனைச் செயல்படுத்த வாய்ப்புள்ளது, செய்யுமா பா.ஜ.க..?” என கேள்வி எழுப்பியுள்ளார்.