Newsu Tamil
தமிழ்நாடு செய்திகள் பணம்

வெளிமாநில தொழிலாளர்களை மீண்டும் தமிழகம் அழைத்து வருவது எப்படி?

சென்னை:

ஊரடங்கு காரணமாக தங்களின் சொந்த மாநிலம் சென்ற வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் தமிழகம் திரும்புவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாக, தமிழகத்தில் பணியாற்றிய சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்கு திரும்பினர். சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வடமாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறையின் சார்பில் அரசுக்கு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு நிரந்தர வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

  1. வெளிமாநில தொழிலாளர்களை அழைத்துவர விரும்பும் நிறுவனங்கள், அந்தந்த மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் மூலமாக இ.பாஸ் விண்ணப்பிக்க வேண்டும்.
  2. அதில் தொழிலாளர்களின் பெயர், முகவரி, ஆதார் எண், செல்போன் எண், பணியாற்றும் இடம், வாகண எண், தனிமைப்படுத்துவதற்கான இடம் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும்.
  3. அந்த விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து அனுமதி அளிக்க வேண்டும்.
  4. தொழிலாளர்களின் போக்குவரத்து செலவை நிறுவணங்களே ஏற்க வேண்டும்.
  5. தமிழகம் திரும்பும் வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரும் அந்த அந்த நிறுவனங்களின் செலவில் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
  6. அதில் தொற்று உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.
  7. தொற்று உறுதிசெய்யப்படவில்லை என்றால் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் வேண்டும்.
  8. மீண்டும் பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்தில் முகக்கவசங்கள் அணிவதையும், அடிக்கடி கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தவும் வேண்டும்.
  9. அவர்கள் தங்கும் இடங்கள் காற்றோட்ட வசதியுடன் துாய்மையாக இருப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
  10. பணிக்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு நாள்தோறும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட வேண்டும்.