Newsu Tamil
தமிழ்நாடு செய்திகள் மறைக்கப்பட்டவை

பெரியார் நீர் வீழ்ச்சியில் “பெரியார்” பெயர் மீது காவிச்சாயம் பூச்சு

தமிழகத்தில் தொடர்ந்து பல இடங்களில் பெரியார் சிலையை சேதப்படுத்தும் வேலைகளிலும், இழிவுபடுத்தும் செயல்களிலும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு கும்பல் ஈடுபட்டு வருகிறது. கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெரியார் சிலை மீது காவிச்சாயம் பூசப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன்மலை பகுதியில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் உள்ள பெயர் பலகையில் “பெரியார்” என்ற பெயர் மீது காவி நிறம் பூசியுள்ளனர் சமூக விரோதிகள். தகவலறிந்து அங்கு வந்த பொதுப்பணித்துறையினர் பலகையின் மீது பச்சை வண்ணம் பூசினர். இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.