Newsu Tamil
crime தமிழ்நாடு செய்திகள் மறைக்கப்பட்டவை

சென்னை விஷ்வ இந்து பரிஷத் அலுவலகத்தில் எஸ்.ஐ. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சென்னை தியாகராயர் நகரில் ஆர்.எஸ்.எஸின் தோழமை அமைப்பான விஷ்வ இந்து பரிஷத் அலுவலகம் அமைந்துள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் சேகர் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று மாலை அவர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சேகரின் உடல் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சேகர் பணியின் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.