Newsu Tamil
crime தமிழ்நாடு செய்திகள் மறைக்கப்பட்டவை

போலீஸ் தாக்கி ஒருவர் இறந்ததாக புகார்!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் சண்முகம். இவரை பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் படுகாயமடைந்த சண்முகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

போலீஸ் தாக்கிய இரண்டு நாட்கள் கழித்து இன்று மருத்துவமனையில் சண்முகம் உயிரிழந்ததுள்ளார். இந்த நிலையில் பாளை தாலுகா காவல் நிலையத்தில் சண்முகத்துக்கு விபத்து ஏற்பட்டுள்ளது என வழக்குப் பதிவு செய்துள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

போலீசாரை கண்டித்தும், இன்ஸ்பெக்டரை கைது செய்ய வலியுறுத்தியும்
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி உடற்கூறாய்பு மையத்தின் முன் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 32 பேரும் கைது செய்யப்பட்டனர்.

ஆனால், உறவினர்களின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள போலீஸ், சண்முகம் விபத்தில் இறந்ததாக கூறியுள்ளது.

ஏற்கனவே சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்கிய தந்தை, மகன் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து தென்காசி ஆலங்குளத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார். காயல்பட்டினத்தில் ஒரு இளைஞருக்கு கிட்னி செயலிழந்தது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.