Newsu Tamil
அரசியல் தமிழ்நாடு செய்திகள் மறைக்கப்பட்டவை

EIA பற்றி பேசி ஒரே நாளில் பிரபலமான பெண் – அச்சுறுத்திய பாஜக நிர்வாகி… வீடியோ நீக்கம்!

EIA 2020 எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு திருத்தச்சட்ட வரைவு மார்ச் 22, 2020 ல் மத்திய அரசின் சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தினால் வெளியிடப்படுள்ளது. EIA 2020 சூழலியல் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கு சூழலியல் ஆர்வாளர்களுக்கும் மக்களுக்கும் எஞ்சியுள்ள கடைசி நம்பிக்கையையும் வழிமுறைகளையும் நசுக்குவதாக உள்ளது.

முழு செய்திக்கு:

ஸ்டெர்லைட்டை விட ஆபத்தான நிறுவனங்கள் தொடங்க உதவும் மத்திய அரசின் சட்டம்!

மத்திய பாஜக அரசின் இந்த சட்டத்திருத்தத்துக்கு சமூக வலைதளங்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக சென்னை தமிழச்சி என்ற யூடியூப் சேனலில் பத்மபிரியா என்ற பெண் இ.ஐ.ஏ-வை எதிர்த்து பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது. காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்ட பலரும் பத்மபிரியாவின் வீடியோவை பகிர்ந்திருந்தனர்.


EIA பற்றி மக்களிடையே உடனடியாக விழிப்புணர்வு ஏற்பட்டதற்கு முக்கிய காரணமாக அமைந்தது பத்மபிரியாவின் பேச்சு. இந்த நிலையில், பா.ஜ.கவை சேர்ந்த கல்யாணராமன் ட்விட்டர் பக்கத்தில் பத்மபிரியாவின் பெயர், விலாசம், மொபைல் எண் இருந்தால் அனுப்புங்கள் எனக்கேட்டார்.

கல்யாணராமன் பிற மதத்தவரையும், பாஜகவை எதிர்ப்பவர்களையும் தரக்குறைவாக பேசியும், எழுதியும் வருபவர். இதற்காக கைதாகியும் உள்ளார்.

இந்த நிலையில், பொதுத்தளத்தில் ஒரு பெண்ணின் தனிப்பட்ட விபரத்தை கேட்பது அவரை அச்சுறுத்தும் வகையில் பலரும் கல்யாணராமனுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், பத்மபிரியாவின் சென்னை தமிழச்சி யூடியூப் சேனலில் இருந்து EIA பற்றி பேசிய வீடியோ நீக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்த வீடியோ திடீரென நீக்கப்பட்டிருப்பது பாஜகவினரின் மிரட்டல் காரணமாகவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.