Newsu Tamil
Headlines பணம்

வரலாற்றில் முதன்முறையாக ரூ.40,000-ஐ கடந்தது தங்கம் விலை

சென்னையில் நேற்று 4 ஆயிரத்து 905 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம் இன்று காலை 73 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 978 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 39 ஆயிரத்து 824 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் சவரனுக்கு ரூ.872 அதிகரித்து ரூ.40,104-ஐ தொட்டுள்ளது. கிராம் ரூ.5,013-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ரூ.40,000-ஐ தொடுவது வரலாற்றில் இதுவே முறை.

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, கொரோனா ஊரடங்கு மற்றும் இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள எல்லை பதற்றம் ஆகியவை தங்கத்தின் விலை உயர்வதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக நகை வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த ஜெயந்திலால் ஜலானி தெரிவித்துள்ளார்.

மேலும் உலகம் முழுவதும் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்த மக்கள் தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கியிருக்கின்றனர். இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும், நேற்று ஒரு கிலோ வெள்ளி 66 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 3900 ரூபாய் அதிகரித்து 70 ஆயிரத்து 800 க்கு விற்பனை செய்யப்படுகிறது.