Newsu Tamil
sports தலையங்கம்

வெற்றிக்கான ஒரு தலைமுறை கால போராட்டம்

You will never walk alone என்ற தாரக மந்திரத்தை கொண்ட அணி LIVERPOOL FC. இந்த வருடம் Premier league champion கோப்பையை கைப்பற்றியது Liverpool. என்னதான் தற்போதைய ஐரோப்பிய சாம்பியன், ஐரோப்பாவின் சிறந்த அணிகளுல் ஒன்று என்றாலும் இந்த அணி மகுடம் சூட எடுத்து கொண்ட வருடம் ஒரு தலைமுறை.

19-ம் நூற்றாண்டின் முடிசூடா மன்னன்:
1892 ஆம் ஆண்டு Anfield என்ற மைதானத்தை சொந்தமாக கொண்டு உருவானது Liverpool அணி. முதல் கட்ட தொடர்களில் சுமாராக ஆடிய அணி முதன்முதலில் கோப்பையை கைப்பற்றியது 1900-01 ஆண்டில் தான். அடுத்த கோப்பையை 1905-06 ஆண்டில் வென்றது. 1921-22, 1922-23 ஆண்டுகளிலும் என்று தொடர் வெற்றிகளை கண்டு கோப்பையை கைப்பற்றியது. பின் இருபத்தைந்து வருடம் கழித்தே ஐந்தாவது கோப்பையை தன் வசமாக்கியது.

இருண்ட காலம் தொடங்கியது:

அதன் பின்னர் Liverpool அணிக்கு இருண்ட காலமானது, First division-ல் இருந்து Relegation ஆனது, Second division-ல் பதினைந்து ஆண்டுகள் கழித்தது. பின்னர் 1962-ல் தனது பயணத்தை தொடங்கி 1990 வரை 13 titles என மொத்தம் 18 முறை League champions ஆனது. Liverpool அணியின் பரம எதிரி என்று அழைக்கப்படும் Manchester United அணி அப்போது வரை ஏழு முறை கோப்பையை கைப்பற்றியிருந்தது. The most dominant english football club என்று அழைக்கப்பட்டது.

1992-ல் League Cup ஆனது Premier league என்று பெயர் மற்றும் சில விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டது. இந்த Premier league era-வில் ஒரு கோப்பையை கூட கைப்பற்ற முடியவில்லை. பல முறை சிறப்பாக ஆடியும் 2001-02, 2008-09, 2013-14, 2018-19 ஆகிய ஆண்டுகளில் இரண்டாம் இடமே கிடைத்தது.

நழுவிய வாய்ப்புகள்:

2013-14 ஆண்டுகளில் மிகவும் பலமான அணியாக Liverpool இருந்தது. அந்த ஆண்டில் கடைசி நாள் இந்த போட்டியில் Chelsea-யை வெற்றி பெற்றால் கோப்பையை கைப்பற்றலாம். ஆனால் ஆட்டத்தின் பாதியில் அணியின் கேப்டன் Gerrard பந்தை தடுத்து ஆடும்போது slip ஆனதால் கோப்பையும் slip ஆகி Manchester City கையில் சென்றது.இந்த ஆண்டில் சிறப்பாக ஆடியது அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான Luis Suarez , இவர் இந்த வருடத்திற்கான Europian golden shoe என்ற விருதை Cristiano Ronaldo உடன் பகிர்ந்து கொண்டார். ஆனால் அடுத்த ஆண்டில் Suarez FC Barcelona விற்கு செல்லவே அணியின் நிலைமை மோசமானது.

புதிய எழுச்சி:

கடந்த ஆண்டில் நூறு கோல்களுக்கு மேல் அடித்த அணி இந்த ஆண்டில் அடித்தது 51 கோல்கள் மட்டுமே. இந்த 2014-15 ஆண்டில் ஆறாவது இடமே கிடைத்தது. 2015-16 அணியின் நிலைமை மோசமானதால் தொடரின் பாதியில் மேனேஜரான Brendon Rogers-யை கழட்டி விட்டு புதிய மேலாளர் Jurgen Klopp-ஐ தேர்வு செய்தது Liverpool அணி நிர்வாகம். Jurgen Klopp அணியின் மேலாளராக பொறுப்பு ஏற்ற பின் பல மாற்றங்களை செய்கிறார். அணி Forward area-வில் மிகவும் மோசமாக இருப்பதால் அதில் கவனம் செலுத்தினார். இதன் விளைவாக Europa league-ல் final வரை சென்றது Liverpool. இறுதி ஆட்டத்தில் Sevilla-விடம் கோப்பையை தவிர விட்டது. கடந்த சீசனில் நான்காம் இடத்தை பிடித்தது.

முஹம்மது சலாவின் வருகை:

அடுத்த சீசனில் இத்தாலி club ஆன Roma-விடம் இருந்து Mohamed Salah-வை வாங்குகிறது Liverpool. அப்போது தெரியாது Salah பல கோப்பைகளை வாங்கி கொடுப்பார் என்று. ஆடிய முதல் சீசனில் 32 கோல்கள் அடித்து Premier league சாதனையை தன் வசமாக்கினார் Salah. எப்போதும் Liverpool அணிக்கு அதிக எதிர்ப்பாளர்கள் உண்டு. The most hated english football club என்றால் அது Liverpool என்று சொல்வார்கள்.இதற்காகவே Salah ‘One season wonder’ என்று ஏளனம் செய்யப்பட்டார். 2017-18 ஆண்டிற்கான Champions league இறுதி ஆட்டம் வரை சென்றது. இறுதி ஆட்டத்தில் Salah காயமடையவே Liverpool எளிதாகவே Real Madrid இடம் சரணடைந்தது. மீண்டும் இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்து வெளியானது. அந்த வருடமும் Premier league-ல் நான்காம் இடத்தை பிடித்தது.

மேலாளரின் புதிய யுக்தி:

தோல்வியை கண்ட பின்னரும் துவண்டு போகாமல் இந்த முறை defence-ல் கவனம் செலுத்துகிறார் மேலாளர் Klopp. அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான Countinho-வை Barcelona- விற்கு 150 மில்லியன் யூரோ விற்கு தள்ளி விட்டு அதை வைத்து Defence-ஐ சரிகட்டுகிறார். 2018-19 தொடர் சிறப்பான துவக்கம். Klopp அனைத்து வீரரையும் மன அளவிலும் உடல் அளவிலும் தயார் செய்கிறார்.

அனைத்து அணியையும் துவம்சம் செய்து மீண்டும் கடைசி நாள் ஆட்டத்தில் Manchester City இடம் கோப்பையை ஒரேயொரு புள்ளி வித்தியாசத்தில் பறி கொடுக்கிறார். அந்த வருடமும் Salah premier league-ன் golden shoe விருதை வென்றார். இந்த வருடத்தின் முக்கியமான ஆட்டமாக இருந்தது Champions league-ன் அரை இறுதி ஆட்டம். முதல் ஆட்டத்தில் Messi-யின் Barcelona விடம் 3-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.

நான்கு கோல்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே இறுதி ஆட்டம் செல்ல முடியும் என்ற இலக்கு. மீண்டும் Salah காயம் பெறவே சோதனை நீடித்தது அணி நிர்வாகத்திற்கு. ஆனால் இந்த முறை அப்படி நடக்கவில்லை Barcelona-வை Anfield வைத்து துவம்சம் செய்து இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது. இறுதி ஆட்டத்தில் Tottenham Hotspur-ஐ எளிதில் வென்று ஆறாவது முறையாக Champions league கோப்பையை கைப்பற்றியது.

கொரோனா என்ற சோதனை:

Virgil van djik தொடர் நாயகன் விருதை வென்றார். 2019-20 season கடந்த ஆண்டை போலவே சிறப்பாக ஆரம்பித்த ஆடிய அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றது Liverpool. கிட்டத்தட்ட கோப்பையை கைப்பற்றும் நிலைமை வந்தது, ஒவ்வொரு ஆண்டும் ஒரு தடங்கல் வந்தது போல் இந்த வருடமும் ஒரு தடங்கல் அதுவே ‘கொரோனா’ , அனைத்து விளையாட்டு போட்டிகளும் நிறுத்தப்படவே இந்த வருடமும் கோப்பையை கைப்பற்றாமல் போய் விடுமோ என்ற எண்ணம். ஆனால் மீண்டும் போட்டிகள் தொடரவே , முப்பது ஆண்டுகள் கழித்து premier league-ஐ தன் வசமாக்கி கொண்டது Liverpool .ஆயிரம் கைகள் மறைக்கலாம், ஆனால் ஆதவன் மறைவதில்லை. ‘YOU WILL NEVER WALK ALONE’