Newsu Tamil
health

வயிற்றுப்போக்கா..? உடனே கொரோனா டெஸ்ட் எடுங்க!

கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதை அறிவதற்கான அறிகுறிகளாக மூச்சு திணறல், சளி, இருமல் போன்றவற்றை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து இருந்தது. வைரஸ் உடலில் நுரையீரல், சுவாச பாதையை தாக்குவதால் இவை முதன்மை அறிகுறிகளாக கூறப்பட்டன.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் சிலருக்கு குடல் மற்றும் வயிற்றுப் பகுதியை முதலில் தாக்குவது தெரியவந்துள்ளது. இதனால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். கடந்த மாதம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வயிற்றுப்போக்கை கொரோனாவின் அறிகுறியாக சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதாலோ, செரிமான குறைபாட்டாலோ ஏற்பட்டதாக பலர் கருதி அலட்சியமாக இருந்துவிடுகின்றனர். ஆனால், 48 மணி நேரத்துக்கு தொடர்ந்து வயிற்றுப்போக்கு இருந்தால், கொரோனா சோதனை அவசியம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அதே போல், மனித கழிவில் மூன்று மாதங்கள் வரை கொரோனா வைரஸ் இருக்கலாம் என ஆய்வுகள் கூறுவதால், தனிமைப்படுத்துதலை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்றும் தனி கழிவறை பயன்படுத்துவதுடன், பொது கழிப்பறைகளை தவிர்க்க வேண்டும்.

வயிற்றுப் போக்குடன் சேர்ந்து சில சமயம் வாந்தி, பசி எடுக்காததும் அறிகுறிகளாக உள்ளதாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருந்தியல் துறை தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் விளக்கமளித்துள்ள அவர், கொரோனா வைரஸை உடலில் ஏந்தி செல்வதற்க்ய் ஏதுவான செல்கள் வயிறு, குடல் பகுதிகளிலும் இருப்பதால் பாதிப்பு அங்கு தெரிய தொடங்குகிறது என்றார்.