Newsu Tamil
சரியா? தவறா? தமிழ்நாடு செய்திகள்

நியூஸ் 18 புகார் – பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் மீது மோசடி வழக்குப்பதிவு

பாஜக ஆதரவாளரான மாரிதாஸ் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் உண்மைக்கு புறம்பான சாதிய, மத மோதல்களை தூண்டி விடும் வகையில் பேசி வீடியோவாக வெளியிடுவார்.

இந்த சூழலில் அவர் நியூஸ் 18 பத்திரிகையாளர்களை குறிவைத்து உள்ளார். அவர்களுக்கு எதிராக அவதூறு பரப்பும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அவர்கள் மீது உள்நோக்கம் கற்பித்துள்ளார். அதில் தரக்குறைவாகவும், ஒருமையிலும் பேசியுள்ளார் மாரி.

மேலும் தனது பேஸ்புக் பதிவில், நியூஸ் 18 ஊழியர்களின் விபரத்தை தனது குழு சேகரித்து வருவதாகவும் முதலீட்டார்களிடம் சொல்லி நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். இந்த நிலையில், நியூஸ் 18 தலைமை தனது புகாரை ஏற்றுக்கொண்டு விட்டதாகவும், விரைவில் நியூஸ் 18 ஊடகவியலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக உறுதியளித்ததாக ஒரு மெயில் ஸ்க்ரீன்ஷாட் ஒன்றையும் பகிர்ந்தார்.

இந்நிலையில், மாரிதாஸ் வெளியிட்ட இந்த ஸ்க்ரீன்ஷாட் மற்றும் வீடியோவுக்கு நியூஸ் 18 தலைமை ஆசிரியர் வினய் சராவகி மறுப்பு தெரிவித்துள்ளார். நான் மெயில் அனுப்பியதை போல் ஒரு பொய்யான படம் பகிரப்பட்டு வருகிறது. விரைவில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதனை தொடர்ந்து வினய் சர்வாகி அளித்த புகாரின் பேரில் மாரிதாஸ் மீது போலி ஆவணங்களை தயாரித்தது, ஹேக்கிங் செய்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்.