Newsu Tamil
தமிழ்நாடு செய்திகள் மக்கள் மறைக்கப்பட்டவை

சாதி மறுப்பு திருமணம் செய்த கணவன் மனைவி தற்கொலை!

சாதிமறுப்பு காதல் திருமணம் செய்த இளம் ஜோடிகள் தற்கொலை. மரணத்திற்கு பெண்ணின் தயார் காரணம் என முகநூல் பக்கத்தில் பதிவிட்டதால் பரபரப்பு.

சென்னை அடுத்த பட்டாபிராம் நடுகுத்தகை பகுதியில் வசித்து வந்தவர் அரவிந்த். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் பட்டாபிராம் பகுதியை சேர்ந்த பவித்ரா என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் வேறு வேறு சாதி என்பதால் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டனர்.

இதனால் பெண்ணின் பெற்றோர் இருவருக்கும் தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளனர். இந்தநிலையில் 2019ம் ஆண்டில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பவித்ரா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து பவித்ராவின் பெற்றோர் அவருக்கு வேறு திருமணம் செய்ய ஏற்பாடு செய்ய முடிவெடுத்து விவாகரத்து கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

காதல் கணவருடன் சேர்ந்து வாழமுடியாமல் மனமுடைந்த பவித்ரா கடந்த 15ம் தேதி அவரது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். இதனை அறிந்த அரவிந்த் தனது மனைவி முகத்தை இறுதியாக முகத்தை பார்க்க வந்தவரை பெண்ணின் குடும்பத்தினர் பார்க்கவிடாமல் அழைக்கழித்து உள்ளனர்.

இதில் மேலும் மனமுடைந்த அரவிந்த் கடந்த 4 நாட்களாக மனஉளைச்சலோடு இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று தனது முகநூல் பக்கத்தில் இருவருடைய காதல் வாழ்க்கையை நினைவு கூர்ந்தும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் தங்கள் இருவரின் மரணங்களுக்கு பவித்ராவின் தாயார் மற்றும் அவரது மாமா ஆகியோரே காரணம் என பதிவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர் தற்கொலைக்கு தூண்டினார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டு காதலர்கள் காதல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.