Newsu Tamil
இந்திய செய்திகள் வைரல்

வெடி மருந்து கலந்த உணவை திண்ற பசுவின் வாய் வெடித்து சிதறிய பரிதாபம்!

கேரளாவின் உணவில் வெடிமருந்து வைத்து காட்டு யானையை கொன்ற சம்பவத்தின் வடு மறைவதற்குள், அதேபோல ஒரு சம்பவம் கர்நாடகாவில் நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காட்டுப்பன்றியின் அட்டகாசத்தை ஒடுக்க வெடி மருந்து கலந்த உணவை நிலையத்தில் வைத்திருந்தபோது அதை பசுமாடு தின்று அதன் வாய் வெடித்துச் சிதறி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்திலுள்ள எச்டி கோட்டை பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து காட்டுப் பன்றிகள் விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதால் அந்த பன்றிகளைக் கொல்ல வெடிமருந்து அடங்கிய உணவை விவசாய நிலத்தில் வைத்துள்ளார்கள். இது தெரியாமல் மஞ்சுநாத் என்பவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று வாயிலில் மேய்ந்து கொண்டிருந்தபோது உணவு என நினைத்து அந்த வெடிமருந்து அடங்கிய உணவையும் சென்றது.

அப்போது வெடிமருந்து பசுவின் வாயிலேயே வெடித்துச் சிதறியது. காயமடைந்த அந்த பசுவிற்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்களும் திணறி வருகிறார்கள். ஒரு பக்கம் காட்டுப்பன்றி இடம் இருந்து பயிர்களைக் காப்பாற்ற வெடி மருந்து கலந்த உணவை வைத்ததாக கூறப்பட்டாலும் இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.