Newsu Tamil
அரசியல் இந்திய செய்திகள் பின்னணி

சி.ஏ.ஏ. எதிர்ப்பாளர்களை தேடி தேடி கைது செய்யும் கெஜ்ரிவால்..!

சிஏஏ, என்ஆர்சி விவகாரங்களில் ஈடுபட்ட அனைத்து தரப்பு சிறுபான்மையினர் மக்களின் மீதும் சத்தமில்லாமல் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது டெல்லி கெஜ்ரிவால் அரசு.

வழக்கு போடப்பட்ட அனைத்து தரப்பு மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்குறைஞர்கள், மருத்துவர்கள் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக இந்த சிஏஏவை எதிர்த்து போராடியவர்களையும் தேடி தேடி சம்மன் அனுப்பி வருகிறது. அதேபோல ஏற்கனவே வழக்கில் பிடிபட்டு இருப்பவர்களின் பிடிகளை இறுக்கி வருகிறது. இதுக்கு எதுக்கு கெஜ்ரிவால் தனிக்கட்சியில் இருக்க வேண்டும். கொரனா ஊரடங்கில் கூட இவர்கள் சிறுபான்மையினருக்கு எதிரான சூழ்ச்சி வலையை பின்னிக்கொண்டே தான் இருக்கிறார்கள்.

பாஜக எம்எல்ஏ முதல் அடிமட்ட தொண்டன் வரை கலவரத்தை தூண்டும் விதமாக பேசியவர்கள் மீதும், குண்டர்களை ஏவி அவர்களுக்கு ஆயுதங்களை கொடுத்து முஸ்லிம் தெருக்களை துவம்சம் செய்ய தூண்டிவிட்டவர்கள் மீதும் இன்னும் கூட ஒரு விசாரணை இல்லை. களத்தில் நின்று கலவரங்களை செய்தவர்கள் பற்றி தகவல் சேகரித்த செய்திப்பிரிவு ஊடகத்துறையினர் மீதும் நீளுகிறது அரசின் ஒடுக்குமுறை.