Newsu Tamil
இந்திய செய்திகள் சரியா? தவறா?

கொரோனா நோயாளியின் உறுப்புகள் திருட்டா..? வைரல் வீடியோவின் பின்னணி

பரவும் செய்தி:

Maharastra… Manori Village…

கொரோனாவால் மரணித்தவர் என உறுதி செய்யப்பட்ட வரின் மரணத்தில், அங்குள்ளவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால்… இறந்தவரின் உடலை கேட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்…

அதைத் தொடர்ந்து, மரணித்தவரின் உடம்பை பெற்றுக் கொண்டவர்கள். அதன் துணியை அகற்றி பார்த்தால் அங்கு அதிர்ச்சி காத்திருந்தது…

இறந்தவரின் உடம்பிலிருந்து அனைத்து பாகங்களும் திருடப்பட்டு, உடம்பு வெறுமனே சுற்றி வைக்கப்பட்டிருந்தது…

இதைப் போன்று, கொரோனாவின் பெயரால் மக்களை பயமுறுத்தி மிகப்பெரிய அளவில் ஏமாற்று வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது…

பாமரர்களை, கொரோனா டெஸ்ட் என்று சொல்லி ஏமாற்றி அழைத்துச் சொல்வது. பின்னர் கொரோனா பாசிட்டிவ் என்று சொல்லி, குறிப்பிட்ட நபர் இறந்து விட்டார் என சொல்லப்படுகிறது…

பின்னர் அவரது கிட்னி, இதயம், இன்னும் என்னென்ன பாகங்கள் தேவையோ, அனைத்தையும் எடுத்து விட்டு . இறந்தவரை பொட்டலமாக்கி… எவரையும் பார்க்க விடாமல், எரிக்க அல்லது புதைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது…._

அது தொடர்பான போராட்டத்தின் காணொளிகள்தான்…..

வீடியோ

உண்மை தன்மை:

முழு விபரம்:

சம்பவம் நடந்ததாக கூறப்படும் மனோரி கிராமம் மும்பைக்கு அருகில் உள்ளது. அந்த கிராமத்தில் இதுவரை 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் குணமடைந்துள்ளார். ஒருவர் கூட கொரோனாவால் அந்த கிராமத்தில் இறக்கவில்லை. எனவே அப்பகுதியில் கொரோனா நோயாளியின் உறுப்புகள் திருடப்பட்டதாக வெளியான தகவல் பொய் என்பது உறுதியாகிறது.

மக்கள் போராட்டம் நடத்தியதாக பகிரப்படும் வீடியோ, அப்பகுதியில் எடுக்கப்பட்டது தான். ஆனால், போராட்டம் வேறு காரணத்துக்காக நடந்துள்ளது. கொரோனா தொற்று உறுதியான ஒருவரை தனிமைப்படுத்தி மருத்துவமனை அழைத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராடியுள்ளனர்.

இந்த வதந்தியை அப்பகுதி காவல்துறையும் மறுத்துள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள அப்பகுதி காவல் ஆய்வாளர் சஞ்சீவ் நர்கார், மும்பையில் கொரோனாவால் இறந்தவர்களின் உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதால் உடல்களை வாங்கக்கூட வர முடியவில்லை. நிலைமை இவ்வாறு இருக்க உறுப்புத்திருட்டை எப்படி நடந்திருக்கும்.” என்கிறார்.