Newsu Tamil
தமிழ்நாடு செய்திகள் மக்கள் மறைக்கப்பட்டவை

10-ம் வகுப்பு தலித் மாணவனை மலம் அள்ள வைத்த கொடுமை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே  கோடிஅள்ளி ஊரட்சி கோடாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் அறிவரசன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் இவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் ஆவார். புதனன்று அறிவரசன் மலம் கழிக்க ஒரு புதருக்குள் சென்றுள்ளார்.

அதைப் பார்த்த ஆதிக்க சாதியை  சேர்ந்த ராஜசேகர் என்பவர் சாதிப் பெயரைச் சொல்லி ஆபாசமாகத் திட்டி அந்த மாணவனை கடுமையாக தாக்கியுள்ளார்.  பிறகு இந்த மலத்தை நீயே சாப்பிடுகிறாயா அல்லது உனக்கு கையால் வாரிக்கொண்டு போய் வேறு இடத்தில் வீசி  விடுகிறாயா என்று தொடர்ந்து அந்த மாணவனை முகத்தில் கம்பால் அடித்து துன்புறுத்தி உள்ளார்.

மாணவன் அடி பொறுக்காமல் அவன் கூறியது போல இரண்டு கையால் மலத்தை அள்ளி கொண்டு ஒரு இடத்தில் போய் வீசி உள்ளார்.  இதை அறிந்த பெற்றோர்கள் மனம் உடைந்துபோய் பெண்ணாகரம் காவல்நிலையத்தில் தீண்டாமை குற்றத்தில் ஈடுபட்ட கோடாரபட்டியைச் சேர்ந்த ராஜசேகர் மீது புகார் அளித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ராஜசேகர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனு அளித்தனர் இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.