Newsu Tamil
health உலக செய்திகள் மறைக்கப்பட்டவை

கொரோனா சிகிச்சைக்கு பயனளிக்கும் மருத்துவர் பாத்திமாவின் ஸ்டெம்செல் மருந்து

அமீரகத்தின் ஷேக் கலிபா மெடிக்கல் சிட்டி மருத்தவமனையில் ஹெமடாலஜி மற்றும் ஓன்காலஜி மருத்துவராக உள்ளார் பாத்திமா அல்’ஃகாபி. இவர் அபுதாபி ஸ்டெம்செல் சென்டரில் வைத்து தயாரிக்கப்பட்ட ஒருவித Inhaler வடிவிலான மருந்தினை அறிமுகம் செய்துள்ளார்.

கோவிட் வைரஸ் தொற்றுக்கு இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் முதற்கட்டமாக மலேரியாவிற்கு கொடுக்கப்பட்ட குளோரோக்யின் மாத்திரைகளை கொடுத்து குணப்படுத்த முயன்றபோது அதெ சரியான தீர்வினை கொடுக்கவில்லை. பிளாஸ்மா தெரபி மூலமும் விரிவான சிகிச்சைகளை கொடுக்க எந்த நாடும் முன்வராத நிலையில் தீவிரப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வைரஸினை கட்டுப்படுத்த தொப்புள்கொடி ரத்தமான மிதமிஞ்சிய எதிர்ப்பு சக்தியை உடைய ஸ்டெம்செல்களை வைத்து அதனை குணப்படுத்தலாம் என முடிவுக்கு வந்தார் மருத்துவர் பாத்திமா.

இதற்கு முதற்கட்டமாக இன்ஹேலர் தயாரித்து அதனை சுவாசிப்பதன் மூலம் கோவிட் தொற்றால் ஏற்படும் மூச்சிரைப்பு மற்றும் மூச்சடைப்பு எளிதில் குணமாவதை கண்டறிந்தார். எனவே கோவிட் பாதித்த சுமார் 73 நபர்களுக்கு இந்த மருந்தினை கொடுத்து அவர்களது நிலை சீரடைவதை கண்காணித்த பிறகு இம்மருந்து தற்காலிக குணமளிக்கிறது என UAE’s ministry of health and prevention அமைச்சகம் தகவல் வெளியிட்டது.

ஒரு தொற்றுக்கான தடுப்பூசி தயாரிக்க 12-18 மாதங்கள் வேண்டும் என்பதால் இந்த ஸ்டெம்செல் இன்ஹேலரை தற்காலிக மருந்தாக உபயோகிக்கலாம் என்றும் மேலும் இதனை அனைவரும் பயன்படுத்தும் வகையில் நுரையீரல் கோளாறுகளுக்கு நல்ல மருந்து தயாரிக்க மேலும் மூன்று மாதங்கள் தேவைப்படும் என மருத்துவர் பாத்திமா ,கடந்த மே மாதம் கூறியிருந்தார். இன்னும் அதற்கான ஆய்வுகள் நடந்துகொண்டுள்ளது. பொதுவாக தொப்புள்கொடி ரத்தத்தை நம்மில் யாரும் மெனக்கெட்டு சேகரித்து வைக்க முனைவதில்லை என்பதே உண்மை.