Newsu Tamil
crime தமிழ்நாடு செய்திகள் மக்கள்

சாத்தான்குளம் அருகே அடுத்த பயங்கரம் – 7 வயது சிறுமி படுகொலை

தூத்துக்குடி: 15-07-2020

சாத்தான்குளம் அருகே உள்ள கல்விளை இந்திரா நகரை சேர்ந்தவர் சேகர். இவரது 7 வயது மகள் முத்தார் வடலிவிளை அருகே காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் உடலை கைப்பற்றிய சாத்தான்குளம் போலீஸ் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தெரிவித்த, மாவட்ட காவல் கண்பாணிப்பாளர் ஜெயக்குமார் கூறியதாவது “சாத்தான்குளத்தில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வடலிவிளை பகுதியில் சிறுமி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். பிரேதம் கிடைத்த சிறிது நேரத்தில் அதே ஊரை சேர்ந்த 2நபர்களை பிடித்து விசாரித்து வருகிறோம்.

அதில், ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு உள்ளார். அந்த நபர் சிறுமியை பலாத்காரம் செய்யவில்லை என்றும் கழுத்தை நெரித்து கொன்றதாகவும் தெரிவித்து உள்ளார். மற்றொரு நபரின் தொடர்பு குறித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.

கடந்த சில நாட்களுக்கு முன் அறந்தாங்கியில் ஒரு சிறுமி, திருச்சி சோமரம்பேட்டையில் ஒரு சிறுமி, திருச்சி மணப்பாறை அருகே ஒரு சிறுமி என அடுத்தடுத்து உயிரிழந்து உள்ளனர். இந்த சூழலில் சாத்தான்குளத்தில் மேலும் ஒரு சிறுமி கொல்லப்பட்டது தமிழக பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.