Newsu Tamil
தமிழ்நாடு செய்திகள் மக்கள் மறைக்கப்பட்டவை

அடுத்த அதிர்ச்சி… சென்னையில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசாபுரத்தில் கழிவுநீர் கால்வாய் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய சென்ற இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கக் கூடிய மீனவ பகுதியான சீனிவாசபுரத்தில், கழிவுநீர் குழாய்களில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதாக புகார் கூறப்படுகிறது.

கழிவுநீர் குழாய் அடைப்புகளை மாநகராட்சி பணியாளர்கள் சரி செய்ய வராத காரணத்தால், அப்பகுதியை நாகராஜன் என்பவரும் பாஷாவும் கழிவுநீர் குழாய்க்குள் இறங்கியுள்ளனர்.

குழாய்க்குள் இறங்கிய நாகராஜ் மற்றும் பாஷா நீண்ட நேரம் வெளியே வராததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், கழிவு நீர்த் தொட்டிக்குள் எட்டிப்பார்த்தனர். எதிர்பாராத விதமாக, இருவரும் விஷவாயு தாக்கி, மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

விஷவாயு தாக்கி உயிரிழந்த இருவரின் உடல்களையும் தீயணைப்புத் துறையினர் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் சீனிவாசபுரம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் இதே போல் கழிவுநீர் தொட்டியில் இறங்கிய தூய்மை பணியாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இதுபோன்ற மரணங்களை அரசும், மக்களும், மீடியாக்களும் ஒரு பெரிய பொருட்டாக பார்ப்பதில்லை.