Newsu Tamil
வைரல்

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #நேபாளி_ராமன் .!

நேபாள பிரதமர் கே.பி சர்மா ஒலி தொடர்ந்து இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டினையும், எதிரான கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றார். இது இரு நாட்டு உறவுகளுக்கு விரிசலை ஏற்படுத்தி வருகின்றது.

கடந்த மே 8-ஆம் தேதி, மத்திய பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங், கைலாஷ் மான்சரோவர் யாத்திரிகர்களுக்கு வசதியாக, 17,000 அடி உயரத்திலிருந்து உத்தர்கண்டில் அமைந்த தார்சாலா சீன எல்லைப் பகுதியுடன் இணைக்கும் 80 கி.மீ. நீள லிபுலேக் புறவழிச் சாலையை, திறந்து வைத்ததிலிருந்து இந்திய-நேபாள உறவில் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது குறிப்பிடத்ததக்கது.

இந்தியாவின் எல்லையை சொந்தம் கொண்டாடியது, இந்தியாவின் தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்குத் தடை விதித்தது போன்ற நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தின.

இதனிடையே ராமர் பிறந்த உண்மையான அயோத்தி, நேபாளத்தில் உள்ளது என்று நேபாள பிரதமர் கே.பி சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.

நேபாள கவிஞர் பனுபக்தாவின் பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்டுள்ள அவர் இவ்வாறாகப் பேசினார். பனுபக்தா நேபாளத்தில் கொண்டாடப்படும் கவிஞர். மேற்கு நேபாளத்தில் உள்ள தனு பகுதியில் 1814ஆம் ஆண்டு பிறந்த இவர், வால்மீகியின் ராமாயணத்தை நேபாள மொழியில் மொழிபெயர்த்தார். 1868ஆம் ஆண்டு காலமானார்.

ராமனுடைய பிறப்பு குறித்த ஆதாரங்களின் உண்மையில் ஏற்படுத்தப்பட்ட திரிபுகள், அவனுடைய பிறப்பிடமாக இந்திய அயோத்தியாவைக் காட்ட ஆரம்பித்தன என்று அவர் தெரிவித்த இந்த கருத்தை நேபாள ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டு உள்ளன.

நேபாளத்தின் பால்மீகி ஆசிரமம், மேற்கு பிர்குன்ஜ், தோரியில் அமைந்திருப்பதுதான் உண்மையான அயோத்தி என்று கூறிய நேபாள பிரதமர், தனது இந்த கருத்துக்கு அறிஞர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பும் என்பதை தான், அறிந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் சீன தூதர் பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்ததை தொடர்ந்து அம்மாதிரியான “புனையப்பட்ட, கற்பனையான” செய்திகளுக்கு எதிராக “அரசியல் மற்றும் சட்டரீதியான” நடவடிக்கை எடுக்கப்படும் என ஜூலை 10ஆம் தேதி நேபாள அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில்  ஆர்.எஸ்.எஸ் சங்கபரிவார கும்பல் கள்எதை வைத்து பெரிய பெரிய கலவரங்களை செய்து இப்பொழுது ஆட்சியையும் கைப்பற்றி உள்ளதோ, அதை தனது நாட்டிற்கு சொந்தம் என நேபாள பிரதமர் கருத்து தெரிவித்தது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே #நேபாளி_ராமன் என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் சென்னை அளவில் முதலிடத்தை பெற்று டிரெண்ட் ஆகி வருகின்றது.