Newsu Tamil
crime தமிழ்நாடு செய்திகள் பின்னணி

ராணுவ வீரரின் தாய், மனைவி படுகொலை – 80 சவரன் கொள்ளை

சிவகங்கை அருகே இரட்டை கொலை – 80 பவுன் நகைக்காக கொலை என தகவல்
நாட்டை பாதுகாக்கும் ராணுவவீரர் வீட்டுக்கு பாதுகாப்பு இல்லை என உறவினர்கள் புகார்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே முடுக்கூரணி கிராமத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சந்தியாகு தனது மனைவி ராஜகுமாரி மருமகள் சினேகா அவரது 8 மாத பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். அவரது மகன் ஸ்டீபன் ராணுவத்தில் லடாக்யில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் சந்தியாகு நேற்று இரவு தோட்டத்தில் இருந்துள்ளார். வீட்டில் மாமியார் மருமகள் குழந்தையுடன் இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த ராஜகுமாரி மருமகள் சினேகாவை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த 80 பவுன் தங்க நகையுடன் இருந்த பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளை அடித்து தப்பினர்.

8 மாத பெண் குழந்தை உயிருடன் தப்பிய நிலையில் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டுகாரர்கள் அதிகாலையில் பார்க்க இரட்டை கொலை கொள்ளை சம்பவம் நடந்தது தெரியவந்ததது. அதனை தொடர்ந்து காளையார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) வருன்குமார் தலைமையில் தீவிரவிசாரணை நடத்தி கை ரேகைகள் நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் அழைத்து வந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். ஒரு ராணுவ வீரரின் குடும்பத்தில் இரட்டை கொலை நடந்திருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த இரட்டைக் கொலை நகைக்காக நடந்ததா அல்லது முன் விரோதம் காரணமாக கொன்றுவிட்டு வழக்கை திசை திருப்ப நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.