Newsu Tamil
crime உலக செய்திகள் மக்கள்

மாஸ்க் போட சொன்னது ஒரு குத்தமா? பேருந்து ஓட்டுநர் படுகொலை

பிரான்ஸின் தென்மேற்கு நகரான பெயோனில் மாநகர பேருந்து ஓட்டுனராக பணிபுரிபவர் பிலிப் மோங்கிலோ (56). இவரது பேருந்தில் 3 பயணிகள் மாஸ்க் அணியாமல் வந்துள்ளனர். அவர்களை மாஸ்க் அணிந்துவருமாறு கூறியுள்ளார் பிலிப். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பிலிப்பை பேருந்தில் இருந்து கீழே தள்ளி தலையில் கடுமையாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த பிலிப் மூளைச்சாவு அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கொல்லப்பட்ட ஓட்டுநர் பிலிப்

இந்த நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பிலிப்பின் மரணத்துக்கு நீதி கேட்டும், கொலையாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பிரான்சில் பொதுமக்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

கொலைக்கு நீதி கோரி பெரும் பேரணி

 

 

இந்த கோர சம்பவத்தை தொடர்ந்து பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான், இறந்த பஸ் ஓட்டுநரின் மனைவியை சந்திக்குமாறு தனது அமைச்சர் ஜெரால்டை அனுப்பினார். அவரிடம் பேசிய கொல்லப்பட்டவரின் மனைவி, `இந்த கோர சம்பவத்தால் தன்னுடைய வாழ்க்கையும், தனது 3 மகள்களின் வாழ்க்கையும் நாசமாகிவிட்டதாக கூறினார். கொலையாளிகளுக்கு அதிகபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் வேதனையுடன்.

கொல்லப்பட்ட பிலிப்பின் மனைவி மற்றும் மகள்