Newsu Tamil
cinema இந்திய செய்திகள்

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் தொற்றும் அனைத்து மட்டங்களிலும் பரவி வருகிறது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தொடங்கி பிரேசில் அதிபர் பொல்சனாரோ வரை உட்சபட்ச பாதுப்பில் உள்ள அதிகாரம் படைத்தவர்களும் கொரோனாவில் இருந்து தப்பவில்லை.

இதே போல் ஹாலிவுட் நடிகர்கள், டென்னிஸ், கிரிக்கெட், கால்பந்து வீரர்கள் என யாரையும் கொரோனா விட்டுவைக்க வில்லை. இந்த நிலையில், தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அமிதாப் பச்சன், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். குடும்பத்தினர் மற்றும் வீட்டு பணியாளர்களுக்கும் சோதனை நடத்தப்பட உள்ளது. கடந்த 10 நாட்களில் என்னை சந்தித்த அனைவரும் கொரோனா சோதனை செய்துகொள்ளுங்கள் என்றார்.

இந்த நிலையில், அவரது மகன் அபிஷேக் பச்சனிடம் நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் அவருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அமிதாப் மனைவி ஜெயா பச்சன், அபிஷேக் மனைவி ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை.