Newsu Tamil
Comedy அரசியல் இந்திய செய்திகள்

மக்கள் தொகை தாங்க எல்லா பிரச்சனைக்கும் காரணம் – மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு

எப்போது பாஜக தலைவர்கள் என்றால் சர்ச்சை பேச்சுகளுக்கு பஞ்சமில்லை. அதில் முக்கியமானவர் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்.

குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து மீடியாக்களில் வெளிச்சம் தேடுபவர். இவர் தற்போது தெரிவித்து உள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதில் “இந்தியாவில் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் மக்கள் தொகை பெருக்கம் தான். வளர்ந்த நாடுகளை போல் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த தனிச்சட்டத்தை கொண்டு வர வேண்டும். மதங்களுக்கு அப்பாற்பட்டு மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டத்தை தீவிரவமாக அமல்படுத்த வேண்டும் என்றார்.”