Newsu Tamil
கல்வி தமிழ்நாடு செய்திகள் பின்னணி

ஆன்லைன் வகுப்பால் லாபம் மாணவர்களுக்கா? அமைச்சர் செங்கோட்டையன் மகனுக்கா?

தமிழகத்தில் மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான கணினி சார்ந்த பயிற்சிகள் உள்ளிட்டவற்றை இ-பாக்ஸ் நிறுவனம் நடத்துகிறது.

இந்த நிலையில், கல்வித் துறையின் பல்வேறு பணிகள் e-box என்ற நிறுவனத்திற்கு கொடுக்கப்படுவது ஏன்? என முதல்வர் தனிப்பிரிவில் தனியார் ஆசிரியர் கல்லூரி கூட்டமைப்பை சேர்ந்த கார்த்தி புகார் அளித்து உள்ளார்.

கார்த்திக், தனியார் கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பு

பதிவு செய்யப்படாத நிறுவனத்தை கல்வித்துறையில் பல்வேறு ஆன்லைன் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது என்றும், இந்த நிறுவனம் அமைச்சர் செங்கோட்டையன் மகன் நடத்தும் கல்லூரியை நிர்வகிக்கிறது என்றும் பல்வேறு புகார்கள் முதல்வர் தனிப்பிரிவில் அளிக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் செங்கோட்டையனின் மருமகளின் தலையிடும் இதில் இருப்பதாக கூறப்படுகின்றது. இவர் இந்த இபாக்ஸ் நிறுவனத்தில் பாட்னராக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகாரின் முழு விபரம்:

“மேலும் இந்த இ-பாக்ஸ் நிறுவனம் நடத்துகின்ற கல்லூரிகளில் ஒன்றான யுனைட்டட் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில், ஆர்எஸ்எஸ் முகாம் ஏற்கனவே நடந்துள்ளது. எனவே இதில் ஆர்எஸ்எஸ் கும்பலின் தலையீடு இருக்குமோ என்ற கேள்வியும் எழும்பியுள்ளதாக புகார்தாரர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையனுக்கு வேண்டப்பட்ட நபர்களுக்கு சொந்தமானதே e-box நிறுவனம். தமிழகத்தில் நீட் பயிற்சி அளிக்கும் இ பாக்ஸ் நிறுவனத்திற்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

கோவை மாவட்டம் பி.என் பாளையத்தை முகவரியாக கொண்டு செயல்பட்டு வருகின்றது அம்பிஸாப்ட் டெக்னாலஜிஸ் என்கிற நிறுவனம். இந்த நிறுவனத்தின் நிறுவனர் பிரதீப் குமார் என்பவர் ஆவார் இந்த நிறுவனம் செயல்படும் அதே முகவரியில் தான் இ பாக்ஸ் மற்றும் இ பாக்ஸ் காலேஜஸ் என்ற இரு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றது.

இதில் இ பாக்ஸ் நிறுவனம்தான் தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகளை அளித்து வருகின்றது. மேலும் தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளையும் இ பாக்ஸ் நிறுவனம் மேற்கொள்ளும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து வருகிறார் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆன்லைன் ரீதியான பயிற்சிகளுக்கு இ-பாக்ஸ் நிறுவனத்தை கொண்டுவருவதற்கான காரணத்தை அலசிய போது சில விவரங்கள் தெரிய வந்துள்ளன.

அதன்படி அம்பிஸாப்ட் சாப்ட் டெக்னாலஜியின் நிறுவனர் பிரதீப்குமாரும் அமைச்சர் செங்கோட்டையனின் மகன் கதிரும் நண்பர்கள் என்று கூறப்படுகின்றது. இருவருக்கும் உள்ளான நட்பை தாண்டி சில விவகாரங்கள் இருக்கின்றன.

அதன்படி e-box காலேஜஸ் என்கிற பெயரில் செயல்படும் நிறுவனம் தற்போது தனியார் கல்லூரிகளை அதன் கீழ் கொண்டு வந்து முழுக்க முழுக்க நிர்வாகம் செய்யும் பணியினை துவங்கி இருக்கின்றது அதன்படி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பது பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்கிறது அதாவது முழுக்க முழுக்க தங்களின் சொந்த கல்லூரிபோல் இ-பாக்ஸ் காலேஜஸ் நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் கல்லூரிகளை நடத்தி வருகின்றது முதற்கட்டமாக கோவையில் 2 பொறியியல் கல்லூரிகள் மற்றும் சேலத்தில் ஒரு பொறியியல் கல்லூரியை e-box காலேஜஸ் நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.

கதிர், செங்கோட்டையன் மகன்

அவ்வாறு கோவையில் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்ட ஒரு கல்லூரிதான் கதிர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லூரி ஆகும். கதிர் காலேஜ் ஆப் எஞ்சினியரிங் கல்லூரி அமைச்சர் செங்கோட்டையன் மகன் கதிருக்கு சொந்தமானது ஆகும். இந்த தொடர்புகளை நாம் கவனிக்கின்ற போது அமைச்சர் செங்கோட்டையன் ஏன்
இ பாக்ஸ் நிறுவனத்தை முழு மூச்சாக ஆதரிக்கிறார் என்பது விளங்கும்.

மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் இ பாக்ஸ் நிறுவனம் மூலம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதே அந்த நிறுவனத்தின் நோக்கம் என்கின்றனர் இதுகுறித்த விவரம் அறிந்தவர்கள்.

இ பாக்ஸ் நிறுவனம் சார்ந்து எழக்கூடிய சில கேள்விகள்:

இ பாக்ஸ் நிறுவனம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நீட் பயிற்சி வகுப்பை நடத்துவதாக கூறினாலும் இ பாக்ஸ் நிறுவனத்திற்கு அரசு கட்டணம் செலுத்துகிறதா அல்லது சேவை மனப்பான்மையுடன் அவர்கள் கட்டணம் பெறவில்லையா??

அமைச்சருக்கு நெருக்கமான நிறுவனத்திற்கு தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆன்லைன் ரீதியான பயிற்சிகளுக்கு குறிப்பிட்ட நிறுவனத்தை ஈடுபடுத்துவது ஏன்?

இதற்கெல்லாம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளிப்பாரா??”

இந்த குற்றச்சாட்டு பெரும் பூதாகரத்தை கிளப்ப இருப்பதாக தெரிகிறது.