Newsu Tamil
Headlines உலக செய்திகள் வரலாறு

சர்ச்சில் இருந்து மசூதியாகி பிறகு மியூசியமாகி மீண்டும் மசூதியான கதை!

இன்றைய பரபரப்பு விவாதம் துருக்கி இஸ்தான்புலில் அமைந்துள்ள ஹகியா சோபியா பற்றியது. (அருங்காட்சியகம் மீண்டும் மசூதியாக மாற்றப்படுகின்றது).

பழைய பெயர் – காண்ஸ்டாண்டிநோபுள்

தற்போதைய பெயர் – இஸ்தான்புல், துருக்கி

மக்கள் தொகை – 8 கோடி

மதம் – 97% இஸ்லாம், 1% – 3% கிறிஸ்துவம் மற்றும் சில

1500 ஆண்டுகால ஹகியா சோஃபியா என்னும் வரலாற்று சின்னத்தின் காலச்சுவடுகள்.

1) பண்டைய இஸ்தான்புல், காண்ஸ்டாண்டிநோபுள் என்று அழைக்கப்பட்டது. (பைசாந்திய அரசர் ‘கான்ஸ்டண்டைன் I’ பெயர் அடிப்படையில்..

2) கி.பி. 360ல் கிரேக்க தேவாலாயமாக கட்டப்பட்டு, அரச குடும்பத்திற்குள் விரிசல் மற்றும் உள்நாட்டு பிரச்சினைகளால் மூன்று முறை சேதமடைந்தது.

3)கி.பி. 537ல் பேரரசர் ஜஸ்டினியனின் கட்டளைப்படி மரக்கூரைகளை அகற்றி சிரியா, எகிப்த் போன்ற நாடுகளிலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்து நவீனமயமாக்கப்பட்டது.

4) சிலுவைப்போர் மன்னர்களின் படையெடுப்பிற்குப்பின் (பலஸ்தீனத்தை கைப்பற்ற போப்பால் உருவாக்கப்பட்ட படைகள்) 13ம் நூற்றாண்டு வரை கிரேக்க மற்றும் ரோமானிய முறையின்கீழ் சர்ச் செயல்பட்டது.

5) 1453 – இருநூறு வருடம் கழித்து பேரரசர் ஃபாதிஹ் சுல்தான் முஹம்மத் காண்ஸ்டாண்டிநோபுளை வெற்றிக்கொண்டு இஸ்தான்புல் என்று பெயர் மாற்றப்பட்டது. அதன்பிறகு ஹகியா சோபியா மஸ்ஜிதாக மாற்றப்பட்டது.

6) 1922 – முதல் உலகப்போரின் தாக்கம், பிரிட்டிஷ் ராஜ்ஜியம் மற்றும் மத்திய கிழக்கு அரபுலக கை ஓங்குதலின் வெளிப்பாடாக 1922ம் ஆண்டு உதுமானிய பேரரசு முடிவுக்கு வந்து 1923ம் ஆண்டு துருக்கி ஒரு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.

7) 1935 – ஐநூறு ஆண்டுகள் தொழுகைக்கான மசூதியாக இருந்த ஹகியா சோபியா , 1935ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த முஸ்தபா கமால் அடாதுர்க் (1923 முதல் 1938) உத்தரவின் பேரில் அருங்காட்சியமாக மாற்றப்பட்டது. பல கலாச்சார மற்றும் மத மாற்றங்களை கொண்டுவந்ததால் உதுமானிய பேரரசின் மீது பற்று கொண்டுள்ள அந்நாட்டு மக்கள் நம் நாட்டு வழக்கின்படி ‘எட்டப்பன்’ என்றே கருதுகின்றனர்.

முஸ்தபா கமால் அடாதுர்க்

8) 2020 – நீண்டகாலமாக வழக்குகள் மூலம் ஒரு குழு, நம் முன்னோர்களால் மசூதியாக வக்ஃப் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டுவந்த ஒன்று திடீரென்று அருங்காட்சியமாக மாற்றப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடுத்து போராடிவந்தது. அதற்கான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஜூலை 2020 வெளியிட்டு ஹகியா சோபியாவை மீண்டும் மசூதியாக உபயோகிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதனை அமல்படுத்த தற்போதைய ஜனாதிபதி எர்துகான் அரசாணை பிறப்பித்து, வரும் 24ம் தேதி முதல் ஜூம்ஆ தொழுகை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எர்துகான்

இதுபோல், கர்தோபா மசூதி ஸ்பெயினில் இஸ்லாமிய ஆட்சி வீழ்ச்சிக்குப்பின் தேவாலயமா இயங்கி வருகின்றது.

கர்டோபா மசூதி, ஸ்பெயின் (இன்று தேவாலயமாக)