Newsu Tamil
environment உலக செய்திகள்

கொரோனாவை தொடர்ந்து புதிய ஆபத்தில் உலகம்

ஐரோப்பிய ஆல்ப்ஸ் பனிமலைகளில் விழும் வெண்பனியானது தற்போது பிங்க் நிறத்தில் காணப்படுவதாகவும் அது காலநிலை மாற்றத்தின் அடையாளம் எனவும், இது பூமிக்கு ஒரு அபாய எச்சரிக்கையாக தெரிகிறது எனவும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் இத்தாலியின் ஆல்ப்ஸ் மலை பகுதியில் பிங்க் நிற பனி விழுந்திருப்பதை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள், பனியில் படரும் ஒரு வித பூஞ்சை காரணமாக பனி பிங்க் நிறமாக மாறுவதாகவும் இதனை காரோட்டனாய்டு பிக்மன்ட் என்றும் அவர்கள் அறிவிக்கின்றனர்.

இந்த பூஞ்சை படருவது காரணமாக பனிமலை மிக சீக்கிரத்தில் உருகி வடிந்துவிடும் அபாயம் உள்ளதால் இது பூமியில் ஏற்பட்டிருக்கும் பருவநிலை மாற்றத்தின் ஒரு அறிகுறி என்றும் அறிவிக்கின்றனர்.

இத்தாலி பெலிஸானோ பகுதியை போலவே சில வாரங்களுக்கு முன்பு அலாஸ்காவிலும், கடந்த மார்ச் மாதம் வடக்கு அன்டார்டிகாவிலும் இதே போல பிங்க் நிற பூஞ்சை பனி விழுந்திருப்பதை உறுதி செய்த உக்ரேனியன் விஞ்ஞானிகள் இந்த பிங்க் பனி, ஐரோப்பாவை தாண்டி வடக்கு அமெரிக்க மற்றும் வடக்கு அண்டார்டிகாவையும் தாக்கி வந்துள்ளது என அறிவித்துள்ளனர்.

வெண்ணிற பனியை தவிர்த்து இதர நிறங்களில் விழும் பனி, சூரிய கதிர்களை ஈர்ப்பதில் அதிக வேகம் காட்டும் என்பதாலும் பனிமலை எளிதில் உருகி வடிவது அத்தனை நல்லதல்ல என்பதும் காலன்டஸ் தீவில் உள்ள ஆராய்ச்சி மையத்தின் கருத்தாக உள்ளது.