Newsu Tamil
Media Critics சரியா? தவறா? தமிழ்நாடு செய்திகள்

மாரியை காரித்துப்பும் மக்கள்… சட்ட நடவடிக்கை பாயும் என நியூஸ் 18 எச்சரிக்கை!

பாஜக ஆதரவாளரான மாரிதாஸ் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் உண்மைக்கு புறம்பான சாதிய, மத மோதல்களை தூண்டி விடும் வகையில் பேசி வீடியோவாக வெளியிடுவார். இப்படி பொய்களை பேசி இவர் வெளியிடும் வீடியோவை சங்கிகள் சிலரும், அந்த பொய்களில் உள்ள நகைச்சுவைக்காக பலரும் பார்க்கின்றனர்.

இப்படி பொய்களை பேசி கிடைக்கும் வருமானத்தை வைத்து தான் வயிற்றுப்பசியை போக்குகிறார் பாவம். அதுபோக இவ்வாறு வீடியோக்களை வெளியிடுவதால் பாஜகவில் இருந்தும் பெரும் தொகை கிடைப்பதாக கூறப்படுகிறது. பொய்களை வைத்தே பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கும் சங்கிகள் பலருக்கு மத்தியில் மாரிதாஸ் ஒரு திணுசாக போர்டு வைத்து தனது பொய்களை எழுதி பாடம் நடத்துவதால் (போர்டுதாஸ்) என்றும் அன்போது அழைக்கப்படுகிறார். வித்தியாசமாக உள்ளது என்று நினைத்து இவரையும் மக்கள் பின் தொடர்ந்தனர். பின் இவரது பேச்சை கேட்டு பொறுக்க முடியாமல் சங்கிகள தவிர மற்றவர்கள் Un subscribe செய்துவிட்டனர்.

பின்னர் பணமதிப்பிழப்புடன் மோடி டிஜிட்டல் இந்தியாவை பெற்றெடுத்ததன் பலனாக டிஜிட்டல் போர்டுக்கு மாரிதாஸ். தனது பெயருக்கு ஏற்றார்போல் மாரி மாரி பேசும் இவர், அரபுகள் சங்கிகளை வைத்து செய்த செய்கையால் மொத்தமாக உருமாறி இஸ்லாமியர்களை புகழ்ந்தார். இதனால் கடுப்பான அவரது வாடிக்கையாளர்களான சங்கிகள் சேனலை அன் சப்ஸ்கிரைப் செய்துவிட்டனர். இதனால் மாரிதாஸின் வருமானம் குறைந்ததால் மீண்டும் பழையபடி பண மூட்டைகளுக்காக மாரி பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடத் தொடங்கிவிட்டார்.

இப்படி பலரை சீண்டிய மாரி, தற்போது வைக்கக்கூடாத இடத்தில் கைவைத்துள்ளார். ஆம், இம்முறை அவர் எதிர்த்து அவதூறு பரப்புபவது பத்திரிகையாளர்கள் மீது. நியூஸ் 18 தொலைக்காட்சியில் நேர்மையான செய்திகளை அதில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் வழங்கி வருகின்றனர். நேர்மை, உண்மை என்றால் பெட்டர்மாக்ஸ் லைட்டின் மேண்டிலை பார்த்த செந்திலை போல் உடைத்துவிட்டு தான் மறுவேலைக்கு செல்வார் மாரி. இந்த சூழலில் அவர் நியூஸ் 18 பத்திரிகையாளர்களை குறிவைத்து உள்ளார். அவர்களுக்கு எதிராக அவதூறு பரப்பும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அவர்கள் மீது உள்நோக்கம் கற்பித்துள்ளார். அதில் தரக்குறைவாகவும், ஒருமையிலும் பேசியுள்ளார் மாரி.

மேலும் தனது பேஸ்புக் பதிவில், நியூஸ் 18 ஊழியர்களின் விபரத்தை தனது குழு சேகரித்து வருவதாகவும் முதலீட்டார்களிடம் சொல்லி நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். இந்த நிலையில், நியூஸ் 18 தலைமை தனது புகாரை ஏற்றுக்கொண்டு விட்டதாகவும், விரைவில் நியூஸ் 18 ஊடகவியலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக உறுதியளித்ததாக ஒரு மெயில் ஸ்க்ரீன்ஷாட் ஒன்றையும் பகிர்ந்தார்.

 

இந்த நிலையில், மாரிதாஸ் வெளியிட்ட இந்த ஸ்க்ரீன்ஷாட் மற்றும் வீடியோவுக்கு நியூஸ் 18 தலைமை ஆசிரியர் வினய் சராவகி மறுப்பு தெரிவித்துள்ளார். நான் மெயில் அனுப்பியதை போல் ஒரு பொய்யான படம் பகிரப்பட்டு வருகிறது. விரைவில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

உண்மைக்கு பக்கம் பக்கமாக பாடம் எடுத்த மாரிதாசின் பொய் அம்பலமாகியுள்ளது சங்கிகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மக்களும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.