Newsu Tamil
court Headlines health சரியா? தவறா? தமிழ்நாடு செய்திகள்

கொரோனா மருந்து கண்டுபிடித்ததாக அவதூறு பரப்பிய தணிகாசலத்துக்கு ஜாமின்

சென்னையில் சித்த மருத்துவமனை நடத்தி வருபவர் தணிகாச்சலம். இவர் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறி வந்தார். பின்னர் இவர் சித்த மருத்துவரே இல்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நிரூபணமானது. இதையடுத்து எந்த சான்றிதழும் இன்றி மருத்துவம் செய்து வந்த போலி மருத்துவரான தணிகாச்சலம் கொரோனா மருந்து கண்டுபிடித்ததாக அவதூறு பரப்பியதாக வழக்கு தொடரப்பட்டது.

திருத்தணிகாச்சலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கடந்த மே மாதம் 5ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மேலும் இரண்டு வழக்குகளில் கைது செய்து செய்யப்பட்டு பின்னர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரது முதல் வழக்கு இன்று எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்தது.

தணிகாச்சலம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, “இது ஒரு பொய் வழக்கு என்றும் உரிய நேரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றும்” வாதத்தை முன் வைத்தார்.

வழக்கை விசாரித்த எழும்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின்துரை இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். சென்னையை விட்டுச் செல்லக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை அவர் விதித்துள்ளார்.