Newsu Tamil
Headlines அரசியல் தமிழ்நாடு செய்திகள்

அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

கொரோனா வைரஸ் தொற்றும் அனைத்து மட்டங்களிலும் பரவி வருகிறது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தொடங்கி பிரேசில் அதிபர் பொல்சனாரோ வரை உட்சபட்ச பாதுப்பில் உள்ள அதிகாரம் படைத்தவர்களும் கொரோனாவில் இருந்து தப்பவில்லை.

தமிழகத்தில் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து அதிமுகவை சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். திமுகவை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க வை சேர்ந்த 5 எம்.எல்.ஏ-க்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.

அன்மையில் அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். முன்னதாக செல்லூர் ராஜூவின் மனைவிக்கும் கொரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது.