Newsu Tamil
health இந்திய செய்திகள் மறைக்கப்பட்டவை

₹5 லட்சம் கொடுத்தால் பாடி தருவோம்… பாஜக தலைவருக்கு நேர்ந்த கதி!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உயிருடன் இருக்கும்போதே இறந்ததாக கூறி 5 லட்சம் பணம் செலுத்தும் படி தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா மாநிலம் அம்பர் பேட்டையை சேர்ந்த பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான நரசிங்கராவ் முதிராஜ்க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை செகந்திராபாத்தில் உள்ள யசோதா என்கிற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக 10 நாட்களுக்கு முன்பு சேர்த்தனர்.

இதுவரை 12 லட்ச ரூபாய் கட்டணம் வசூல் செய்த மருத்துவமனை நிர்வாகம் நேற்று நரசிங்கராவ் முதிராஜ் இறந்து விட்டதாக கூறி மேலும் ஐந்து லட்ச ரூபாய் பணம் செலுத்தி சடலத்தை பெற்று செல்ல வேண்டும் என மருத்துவமனை மருத்துவர் அசோக் தெரிவித்துள்ளார். இதையடுத்து குடும்பத்தினரும் வீட்டில் இறுதி சடங்கிற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

இருப்பினும் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டு நரசிங்கராவ் முதிராஜ் சிகிச்சை பெற்று வந்த அறைக்கு சென்று பார்த்தபோது அவர் உயிருடன் இருப்பதைப் பார்த்து அவர்களது உறவினர்களுக்கு வீடியோகால் மூலம் போன் செய்து காண்பித்தனர்.

தனியார் மருத்துவமனை நிர்வாகம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி பல லட்சம் ரூபாய் பணத்தை சுரண்டுவதாக குற்றசாட்டுகள் இருந்த நிலையில் உயிருடன் இருக்கும் நோயாளி இறந்து விட்டதாக கூறி பணம் பறிக்க முயன்றது ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.