Newsu Tamil
தமிழ்நாடு செய்திகள் மறைக்கப்பட்டவை

20 லட்சம் விவசாயிகளின் தலையில் மண்ணை வாரிப் போடும் மோடி அரசு .!

விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்து கூடாது என்று மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங்கிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் மத்திய அரசு கொண்டு வரவுள்ள 2020 மின்சார சட்டத்திருத்தம் குறித்து முதல்வர் பழனிசாமியுடன் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்கே. சிங் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

அந்த கடிதத்தில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் இலவச மின்சார திட்டங்களுக்கு எதிரான பிரிவுகளை நீக்க வேண்டும், விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்படுவதற்கு வழி வகை செய்ய வேண்டும் என்றும், நிதி நெருக்கடியில் உள்ள மின் பகிர்மான கழகங்களுக்கு கோவிட் கால நிதியாக 90 ஆயிரம் கோடி கடன் தொகை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் வரவேற்பதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மின் உற்பத்தி நிறுவனங்களின் நிலுவைத்தொகையைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே. சிங்கிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில முக்கியக் கோரிக்கையை முன் வைத்து கடிதம் அளித்தார்.

மேலும், மின்சார உற்பத்திக்கு நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுவதாகவும், அது தமிழகத்துக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தற்போது தமிழகத்துக்கு நிலுவையில் இருக்கும் ரூ.50.88 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மத்திய அமைச்சரிடம் கூறினார்.