Newsu Tamil
சரியா? தவறா? தொழில்நுட்பம்

இன்று நள்ளிரவு வாட்ஸ் அப்-ஐ முடக்குகிறாரா மோடி?

நேற்றிரவு முதல் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் ஒரு மெசேஜும் வீடியோவும் வைரலாகி வருகிறது. அத்துடன் இந்தி செய்தி தொலைக்காட்சியான இந்தியா டிவியின் வீடியோ ஒன்றும் பரப்பப்படுகிறது. அந்த பதிவில், இன்று (7-7-20) அன்று இரவு 11 மணி முதல் அதிகாலை 6 மணி வரை வாட்ஸ் அப் முடக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்து உள்ளார் என்று எழுதப்பட்டு உள்ளது.

உண்மை என்ன?

சம்பந்தப்பட்ட பதிவுடன் பகிரப்படும் இந்தியா டிவியின் வீடியோ என்பது ஒரு முழு நீள நிகழ்ச்சியில் இருந்து வெட்டப்பட்டது. தினசரி பரவும் ஒரு வதந்திகளின் உண்மை தன்மை குறித்து விளக்கும் நிகழ்ச்சி இந்தியா டிவியில் வெளியிடப்பட்டது. அதில் ஏற்கனவே இதுபோல் பரவிய வதந்தியின் உண்மை குறித்து விளக்கப்பட்டது. அதையே தங்கள் பொய் பரப்புரைக்கு பயன்படுத்தி உள்ளனர் என்பது தான் வேடிக்கை.

india tv


அந்த பொய் செய்தியுடன் வாட்ஸ் அப்பில் கட்டண சேவை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் கட்டணம் செலுத்தினால் மட்டுமே இனி சேவையை தொடர முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற வதந்தி கடந்த 2013, 2014, 2015-ம் ஆண்டுகளிலும் பரவியதாக உண்மை கண்டறியும் நிறுவனமான ஆல்ட் நியூஸ் தெரிவித்து உள்ளது.