Newsu Tamil
court Headlines தமிழ்நாடு செய்திகள்

பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் கலைக்கப்படுமா? – டிஜிபிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்ட விவகாரம் பூதாகரமாகி உள்ள நிலையில், காவல்துறையுடன் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீசும் இந்த படுகொலைக்கு காரணம் என்ற தகவல் வெளியானது. இந்த நிலையில் ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பின் சேவா பாரதியை சேர்ந்தவர்களை காவல்துறைக்குள் கொண்டு வந்துள்ளதும் அம்பலமானது.

இதனால், ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை தடை செய்ய பலர் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீசை தடை செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதனை தொடந்து பல மாவட்டங்களில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் உள்துறை செயலர் மற்றும் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், கீழ்காணும் கேள்விகளை மனித உரிமை ஆணையம் எழுப்பியுள்ளது.

“காவல்துறை பணிகளுக்கு பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸை பயன்படுத்த சட்ட அனுமதி உள்ளதா?

காவல்துறை பணிகளில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸை ஈடுபடுத்துவது மனித உரிமை மீறல் இல்லையா?

காவல்துறை பணிகளுக்கு பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸை ஈடுபடுத்துவது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது அல்லவா?

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தொடர்பு உள்ளதாக புகார் வந்துள்ளதால் அந்த அமைப்பு நிரந்தரமாக கலைக்கப்படுமா?”

என்ற கேள்விகளுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.