Newsu Tamil
இந்திய செய்திகள் கல்வி தலையங்கம்

கல்வி என்ற காதலனுக்காக தினசரி 24 கி.மீ. சைக்கிள் பயணம்… 98.7% மதிப்பெண் பெற்ற மாணவி

மத்தியப்பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தை சேர்ந்தவர் ரோசினி பதூரியா, 15 வயது சிறுமியான இவர் பத்தாம் வகுப்பு மாணவி. தனது வீட்டிலிருந்து தினமும் 12 கிமீ தூரம் பள்ளிக்கும், பள்ளியிலிரிந்து 12 கிமீ தூரம் வீட்டிற்குமாக தினமும் 24 கிமீ சைக்கிளில் மிதித்து போய் வந்து கொண்டிருந்தார். அவரது உழைப்பிற்கு கிடைத்த வெகுமதியாக அவர் இவ்வாண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 98.5% மதிப்பெண் பெற்று மாநிலத்தில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

அறிவியல் மற்றும் கணித பாடங்களில் 100/100 மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ள ரோசினியின் தந்தை புருஷோத்தமன் பதூரியா ஒரு விவசாயி ஆவார். சிறிய அளவில் நிலத்தில் அவர் விவசாயம் செய்து மூன்று குழந்தைகளை படிக்க வைக்க இயலாத நிலையில் ரோசினி மற்றும் அடம்பிடித்து பள்ளிக்கு சென்றுவந்தார். இத்தனையாண்டு காலமும் சைக்கிளை மிதித்து பள்ளிக்கு போய் வர அவர் அசட்டை காட்டவில்லை. மழைக்காலங்களில் பலநேரமும் அவருக்கு சொந்த கிராமத்திற்கு திரும்ப இயலாது…எனவே உறவினர்களின் வீட்டில் தங்கிக்கொள்வார், மறுநாள் தான் வீட்டிற்கு வருவார். அவரது அரும்பாடிற்கு கிடைத்த வெற்றியாக பள்ளிக்கூட ஆசிரியர்கள் அவரை பாராட்டி புகழ்கின்றனர்.

எதிர்காலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக வரவேண்டும் என்பது ரோசினியின் ஆசை.