Newsu Tamil
corona இந்திய செய்திகள் மறைக்கப்பட்டவை

ஐதராபாத்தில் அதிர்ச்சி! நாய்க்கு உணவான கொரோனா நோயாளி உடல்

ஹைதராபாத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த முதியவரின் சடலத்தை உரிய முறையில் தகனம் செய்யாததால் நாய்கள் கடித்து சாப்பிடும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழக்கக் கூடியவர்களின் சடலங்கள் அங்கு உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை அருகே உள்ள அரிச்சந்திரா மயானத்தில் தகனம் செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக மாநகராட்சியின் சார்பில் மூன்று அதிகாரிகள் தலைமையில் சிறப்பு கமிட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த முதியவர் ஒருவர் சடலம் நேற்று எரிக்கப்பட்டது. அந்த சடலத்தின் உறவினர் தனது தாத்தாவின் சாம்பலைப் பெறுவதற்காக மயானத்திற்கு வந்தார்.

ஆனால் தனது தாத்தா தகனம் செய்யப்பட்ட இடத்தில் சரியான முறையில் உடல் எரிக்கப்படாததால் நாய் இழுத்துக் கொண்டு அதனை கடித்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வீடியோவை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே ஹைதராபாதில் கொரோன வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் வென்டிலேட்டர் வைக்காமல் இருப்பதாக கூறி இருவர் செல்பி வீடியோ எடுத்து உயிரிழந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இறந்தவர் உடல் சரியான முறையில் தகனம் செய்யாமல் நாய் கடித்து சாப்பிட கூடிய அவலநிலை ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.