Newsu Tamil
cinema crime தமிழ்நாடு செய்திகள்

ரூ.2 கோடி கொடுக்குறதா சொல்றாங்க… தூக்கமே வரல! – பாடகி சுசித்ரா பரபரப்பு ட்வீட்

சாத்தான்குளம் தந்தை, மகன் சிறையில் காவலர்களால் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகையே உலுக்கி உள்ளது. பல நாடுகளை சேர்ந்த மக்கள் ஜெயராஜ், பென்னிக்சுக்கு நீதி கேட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இதற்கு இந்திய திரை மற்றும் விளையாட்டு பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், பாடகி சுசித்ரா இதை உலகம் முழுவதும் பேச வேண்டும் எனக்கூறி ஆங்கிலத்தில் வீடியோ வெளியிட்டார்.

மற்ற வீடியோக்களை விட சுசித்ரா பேசியது அதிகளவில் பகிரப்பட்டு உலகளவில் பேசுபொருளானது. சுசித்ராவின் வீடியோவை சுட்டிக்காட்டி பல நாடுகளை சேர்ந்தவர்கள் வீடியோ வெளியிடத் தொடங்கினர்.

இந்த நிலையில், சுசித்ரா ட்விட்டரில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், எதிர்க்கட்சியினர் (திமுக) ஆட்சியில் இருந்தபோது போலீஸ் படுகொலைகள் நடந்து உள்ளன. அதுபற்றி பேசி வீடியோ வெளியிட்டால் ரூ.2 கோடி தருவதாக சிலர் பேரம் பேசியதாகவும், இதனால் தனக்கு தூக்கமே வரவில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.