Newsu Tamil
தமிழ்நாடு செய்திகள் மக்கள் மறைக்கப்பட்டவை

தூத்துக்குடியில் அடுத்த அதிர்ச்சி… விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த சோகம்

தூத்துக்குடி மாவட்டம் கீழ செக்காரகுடியில் கழிவுநீர் தொட்டியில் தூய்மை செய்யும் பணி எந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் இன்றி நடைபெற்றது. கழிவு நீர் தொட்டியில் தூய்மை பணியாளர்கள் இறங்கி மனித கழிவுகளை அகற்றிக் கொண்டு இருந்தனர்.

அப்போது விஷவாயு தாக்கியதில் தூய்மை பணியாளர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடல்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், கழிவுநீர் தொட்டி உரிமையாளர் மீது கொலை வழக்கு, எஸ்.சி மற்றும் எஸ்.டி வன்கொடுமை சட்டம் மற்றும் கையால் மலம் அள்ள வைப்பதற்கு எதிரான சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 50 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிட வேண்டும், பாதிக்கப்பட்ட நபரின் குழந்தைகளுக்கு கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 70 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.