Newsu Tamil
உலக செய்திகள் மக்கள் மறைக்கப்பட்டவை

அமெரிக்காவுக்கு சென்றும் சாதிவெறி… 2 இந்தியர்கள் மீது வழக்கு

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சிஸ்கோ சிஸ்டம்ஸ் இன்க்.கில் மேலாளராக பணிபுரிந்து வருபவர்கள் சுந்தர் ஐயர், ரமண கொம்பெல்லா. இவர்கள் தங்களுக்குக் கீழ் பணிபுரிந்த தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவரை சாதி ரீதியில் துன்புறுத்தியதாகவும், அவருக்கான ஊதிய உயர்வு, பதவி உயர்வு நியாயமான சலுகைகளை தடுத்தும் வந்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்படவர் அளித்த புகாரின் பேரில் கலிபோர்னியா போலீஸ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த சாதி துன்புறுத்தலை கண்டுகொள்ளவில்லை என அந்நிறுவனம் மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இது நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட அமெரிக்க மற்றும் பன்னாட்டு ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் நற்பெயரை இந்த படித்த சாதிவெறியர்கள் அமெரிக்காவுக்கு போய் நாரடித்துள்ளனர்.