Newsu Tamil
court crime Headlines தமிழ்நாடு செய்திகள்

“உன்னால் ஒன்னும் புடுங்க முடியாது” என மேஜிஸ்திரேடை மிரட்டிய சாத்தான்குளம் போலீஸ்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை, மகன் இலவச செல்போன் தராததால் குறிவைத்து அவர்களை போலீஸ் சிறையில் வைத்து கொன்ற சம்பவம் உலகையே உலுக்கி இருக்கிறது. இந்த நிலையில், தூத்துக்குடியில் போலீஸ் மேல் குற்றம்சாட்டி கடிதம் எழுதிவிட்டு ஒருவர் தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வழக்கை தாமான முன்வந்து விசாரித்து வரும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கோவில்பட்டி நடுவர் நீதிமன்ற நீதிபதி நேரில் சென்று விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில் சாத்தான்குளம் காவல்துறையினர் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து “உன்னால் ஒன்னும் புடுங்க முடியாது” என்று தவறான வார்த்தைகளை பேசுவதாக மேஜிஸ்திரேட் உயர்நீதிமன்றத்தில் புகாரளித்தார்.

இதையடுத்து காவல் நிலையத்திற்கு பொறுப்பாளரான கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன், குற்றவியல் நடுவர் விசாரணையை வீடியோ எடுத்த தலைமை காவலர் மகாராஜன் இவர்கள் மீது நீதித்துறை நடுவர் நீதிபதி மீது தவறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

அத்துடன் இவர்கள் மூன்று பேரையும் உடனடியாக பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும், இவர்கள் 3 பேரும் நாளை வழக்கு விசாரணையின்போது ஆஜராகவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.