Newsu Tamil
court இந்திய செய்திகள் மறைக்கப்பட்டவை

தப்லீக் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினரை தாய் நாடு அனுப்பாதது ஏன்? – உச்சநீதிமன்றம்

டெல்லி: கடந்த மார்ச் மாதம் டெல்லி நிஜாமுதீன் நடைபெற்ற தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டினர் 900 பேர் மீண்டும் இந்தியா வருவதற்கு நிரந்தர தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவிற்கு எதிராக இந்த பட்டியலில் இடம்பெற்ற சில வெளிநாட்டவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, தடைசெய்யப்பட்ட பட்டியலில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் இது குறித்த விவரங்கள் நேரடியாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் இந்த வெளிநாட்டவரின் வீசாக்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்கிறீர்கள்? ஆனால் அவர்கள் ஏன் இன்னும் இந்தியாவிலேயே இருக்கிறார்கள்? அவர்களை ஏன் இன்னும் அவர்களது நாடுகளுக்கு அனுப்பி வைக்காமல் உள்ளீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

வெளிநாட்டவரின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான வேறு ஏதேனும் ஆவணங்கள் உள்ளதா என்பதை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு கூறிய நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜூலை 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.