Newsu Tamil
#அந்தர்_பல்டி வைரல்

சீனாவிடம் கோடிக்கணக்கில் வாரிக்குவித்த சௌகிதார் மோடி .!

சீன இராணுவத்தினர் தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி,
பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். பாஜக வின் தொண்டர்கள் முதல் மத்திய அமைச்சர்கள் வரை சீனப் பொருட்களை புறக்கணிப்போம் என்று கூறி வரும் நிலையில், கடந்த 2005 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு, சீனாவிடமிருந்து ரூ 1.45 கோடி நன்கொடை பெற்றது குறித்து பாஜக கேள்வி எழுப்பியிருந்தது.

“2005 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை ரூ 1.45 கோடி நன்கொடை பெற்றது தவறு என்றால், 2020 ஆம் ஆண்டில் சீன நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பிரதமர் மோடியின் தனிக் கட்டுப்பாட்டில் உள்ள PM-CARES நிதியம் பெற்றதே, அது எப்படி நியாயம்?

சீனா எப்பொழுது ஊடுருவியது? 2013, 2014, 2018, 2020 இல் ஊடுருவல் நடைபெற்றது. இந்த ஊடுருவல்களுக்குப் பிறகு பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ள நிதியம் சீன நிறுவனங்களுடமிருந்து நிதி பெற்றது மாபெரும் குற்றமல்லவா?

2020 மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீன நிறுவனங்கள் நிதி கொடுக்கிறார்கள். அதே மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீனத் துருப்புகள் ஊடுருவுகின்றன, இது எப்படி இருக்கு?”

இவ்வாறு பா.சிதம்பரம் டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

“சீன அதிபர் ஜீயும், இந்தியப் பிரதமர் மோடியும் ஊஞ்சலாடுகிறார்கள், சீனத் துருப்புகள் ஊடுருவிகின்றன! இது எப்படி இருக்கு?

சீனாவின் ‘Huwae’ நிறுவனம் ரூ.7 கோடியும், ‘Tik Tok’ செயலி நிறுவனம் ரூ.30 கோடியும், ‘Pay-tm’ நிறுவனம் ரூ.100 கோடியும், Oppo ரூ.1 கோடியும் மற்றும் ‘Xiomee’ நிறுவனம் ரூ .15 கோடியும் PM நிதிக்கு வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

சீனா இந்திய வீரர்களை கொன்றிருக்கும் சூழலில், மோடி ஏன் PM கேர்ஸ் நிதியத்திற்கு சீனாவிடம் இருந்து பணத்தை பெற்று இந்திய நிலத்தில் சீன ஆக்கிரமிப்பு குறித்து தவறான தகவல்கள் மூலம் நாட்டை தவறாக வழி நடத்துகிறார்,” என்ன பா.சிதம்பரம் காட்டமாக கூறியுள்ளார்.