Newsu Tamil
தமிழ்நாடு செய்திகள் பின்னணி

தந்தை, மகன் கொலை பின்னணியில் உள்ள “காவல் நண்பர்கள்” படையில் RSS ஆதிக்கம்

Friends of police என்ற ஒரு பிரிவு ஏறத்தாழ இருபது வருடங்களாக காவலர்களுக்கு களத்தில் உதவி செய்கிறது. குறிப்பாக இரவு பத்து மணியிலிருந்து அதிகாலை மூன்று மணிவரை சாலையில் இவர்கள் நின்றுகொண்டு, பயணம் செய்பவர்களை லைசன்ஸ், ஆர்சி புக் இருக்கா, குடிச்சிருக்கியா என்று எகத்தாளமாக பேசி கேட்டிருப்பீர்கள். எந்த அரசு சாசனப்படி மக்களை கேள்வி கேட்கும் அதிகாரம் அந்த கும்பலுக்கு வழங்கப்பட்டது என்று தெரியாது?

அது போன்ற கேள்விகளை நானும் சந்தித்திருக்கிறேன், வாய்த்தகராறு ஏற்பட்டு அது பெரிய பஞ்சாயத்தில் போய் முடிந்தது இன்னும் நினைவில் இருக்கிறது ( கல்லூரி நாட்களில் ) ஆரம்ப காலகட்டத்தில் ட்ராபிக் கன்ட்ரோல் செய்ய பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற திட்டம் உருவாக்கப்பட்டது. இன்று அது போலீஸ்காரர்களுக்கு, கூலிப்படைகள் போல் வேலை செய்கிறது காவல் நிலையம் படுகொலை வரை சென்று இருக்கிறது .

சாத்தான்குளம் காவல்நிலைய படுகொலையில் போலிஸ் நண்பர்கள் பங்கு குறித்த டெலிபோன் உரையாடல் ஒன்றை கேட்க நேர்ந்தது. அதுவும் ஆர்.அஸ்.எஸ். பிடியில் சென்றதுதான் இன்னும் பதட்டத்தை அதிகரிக்கிறது.

இதை இன்னும் அப்படியே வளர விட்டால் நாளை நம் வீட்டில் உள்ளவர்களுக்கும் சாத்தான்குளம் நடந்த கோர சம்பவம் நடக்கலாம். Friends of police உடனடியாக தடைசெய்யப்பட வேண்டும்.

இந்த விளம்பரத்தை பாருங்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தொண்டு நிறுவனமான சேவா பாரதியுடன் இணைந்து Friends of police குழு பணி செய்கிறது. அதாவது இருவரும் ஒன்று தான். அவர்கள் முகநூலில் வேலை செய்யாமல் களத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் குறிப்பாக கிராமங்களிலும் நகரங்களிலும்…

வாக்கு அரசியல் காரணத்தைக் காட்டி தலைவர்கள் செய்யும் சமரசத்தின் விளைவுகளால் தமிழ்நாடு ஆர்.எஸ்.எஸ். கூடாரமாகிவிடுமோ என்ற எண்ணம் எழாமல் இல்லை.

– ஸ்டாலின் ரங்கசாமியின் முகநூல் பதிவு (சில மாற்றங்களுடன்)