Newsu Tamil
தமிழ்நாடு செய்திகள் மறைக்கப்பட்டவை

கீழே கிடந்த மாஸ்கை அணிந்ததால் கொரோனா… குடும்பத்துக்கும் பரவியது

வேலூர் மாவட்டம் காட்பாடி ஓடப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 20 வயதான இளைஞர் முகக்கவசம் அணியாமல் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீசாருக்கு பயந்த வாலிபர் அங்கு கீழே கிடந்த முகக்கவசத்தை எடுத்து பயன்படுத்தி உள்ளார்.

அது கொரோனா நோயாளி பயன்படுத்திய மாஸ்க் என்பதால் அந்த இளைஞருக்கும் கொரோனா பரவியது. வீட்டிற்கு சென்ற அவர் மூலம் வீட்டிலிருந்த அவரது பெற்றோர், தம்பி, தங்கைக்கும் கொரோனா தொற்று பரவியது.