Newsu Tamil
தமிழ்நாடு செய்திகள் மறைக்கப்பட்டவை

தென்காசியில் பயங்கரம்… ஆட்டோ ஓட்டுநரை ஆண் உறுப்பில் மிதித்து கொன்ற போலீஸ்

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்துள்ள வீரகேரளம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவரது மகன் குமரேசன் (வயது: 26). ஆட்டோ ஓட்டுநரான இவரை சிறிய விசாரணை ஒன்றுக்காக வீரகேரளம் புதூர் காவல் நிலையத்துக்கு போலீஸ் அழைத்துச் சென்றது.

அங்கு சென்ற குமரேசனை காவல் நிலையத்தில் வைத்து உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் தலைமைக் காவலர் குமார் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் படுகாயம் அடைந்த குமரேசன் பாளைங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்றிரவு குமரேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தனது மகனை போலீஸ் கொன்றுவிட்டதாக கூறி குமரேசனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் 500 மேற்பட்டோர் காவல் நிலையம் அருகே நள்ளிரவில் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட எஸ்.பிக்கு குமரேசனின் தந்தை எழுதியுள்ள கடிதத்தில் நடந்த முழு விபரங்களையும் தெரிவித்து உள்ளார்.

மதுரையில் கறிக்கடை உரிமையாளர் அப்துல் ரஹீம் படுகொலை, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் படுகொலை, காயல்பட்டினத்தில் போலீஸ் தாக்கி இளைஞரின் கிட்னி செயலிழப்பு என போலீசார் அடக்குமுறையால் அடுத்தடுத்து அப்பாவிகள் உயிர் பறிக்கப்பட்டு வருகின்றது.