Newsu Tamil
farmers இந்திய செய்திகள் பின்னணி

மீண்டும் வேட்டையாடிய வெட்டுக்கிளிகள்… இம்முறை டெல்லி அருகே…

கொரோனா நோய் ஒருபுறம் உலகையே புறட்டிக்கொண்டிருக்க, இந்தியாவில் கொரோனாவுடன் சேர்த்து வெட்டிக்கிளிகளும் அடிக்கடி புயலாக வந்து விளை நிலங்களை அழித்து நாசம் செய்து வருகின்றன. ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் கடந்த மாதம் இந்த வெட்டுக்கிளிகளால் லட்சக்கணக்கான விவசாயிகள் பயிர்களை இழந்து தவித்தனர்.

இந்த நிலையில், மீண்டும் வெட்டுக்கிளிகள் வேட்டையை தொடங்கிவிட்டன. அதுவும் நாட்டின் தலைநகரான டெல்லிக்கு அருகில் அமைந்து உள்ள ஹரியானா மாநிலத்துக்கு உட்பட்ட குருகிராமில் வேட்டையை தொடங்கியுள்ளன வெட்டுக்கிளிகள். இன்று காலை புயல் சுழன்றடித்து வந்த வெட்டுக்கிளிகள் குருகிராமில் உள்ள விளைநிலங்களில் உள்ள பயிர்களை நாசம் செய்ததுடன், நகர பகுதிக்குள் புகுந்து ஆக்கிரமித்தன. இதனால் சாலையில் சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர்.

ஏற்கனவே அழிந்து வரும் விவசாயத்தை வேகமாக அழிக்கும் இந்த வெட்டுக்கிளிகளை தடுக்க அரசு எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஊடகங்கள் மற்றும் பொதுமக்களும் விவசாயிகளின் வலிகளை உணராமல் இதை வெறும் கேலிக்குறியதாக பார்ப்பது வேதனைக்குறியது.