Newsu Tamil
Headlines இந்திய செய்திகள் தலையங்கம் பின்னணி

இவங்க கிட்ட போய் நாட்டை ஒப்படைச்சு மாட்டிக்கிட்டோமே… புலம்பும் இந்தியர்கள்

ஆழி பெருநோயில் கூட அரசே கொள்ளையடிக்கிற அவலம்
கடந்த 20 நாட்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி கூடுதல் லாபம். கடந்த மார்ச் 5-ம் தேதியிலிருந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் பல் லட்சம் கோடி மத்திய அரசுக்குக் கிடைத்துள்ளது.
சாமானிய மக்களின் நிலையைப் பற்றி சிறிதுகூட மத்திய அரசு கவலைப்படவில்லை. தமிழக அரசு டாஸ்மாக்கை பிரதான வருவாயாக கொண்டிருப்பதை போல வருவாயின்றி தவிக்கும் மக்களிடமே கொள்ளையடிக்கிறது .

56 இன்ச் மார்புள்ளவனே ஆள தகுதி என்று கூறியவர்கள் ஆட்சியில் இன்று நேபாளம் புதிய எல்லைக்கோட்டை வகுத்திருக்கிறது 72 மணி நேரத்தில் அது சட்டமாகிறது. லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து ஆக்ரமித்திருக்கிறது Go back பதாகை பிடித்து எலுமிச்சைபழம் கட்டியும் நாம் பாதுகாப்பை பலபடுத்தியிருக்கிறோம்.
பெருந்தொற்றில் கூட மத அரசியலை கையிலெடுத்து இன்று உலகளவில் விமர்சிக்கபடுவதும், அரபுநாடுகளில் வாழும் மருத்துவர்களை மத அடையாளம் கொண்டு கண்காணிக்க வைத்திருக்கிறது.

எல்லாவற்றிலும் மதம் முன்னிலைபடுத்தபட்டதன் விளைவு இஸ்லாமியருக்கு மருத்துவமனைகளில் அனுமதிக்க மறுக்கிற கொடுமை நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கல்வியாளராக இருந்தாலும் சரி அனுமதியில்லை என்கிற நிலை இந்திய முகத்தையே சர்வதேச அளவில் கருக்க செய்துவிட்டது. கொரோனா கொடுமையை விட இறந்தவர்களை இவர்கள் கையாளும் விதம் உச்சமீதிமன்றமே மனிதாபிமானமற்ற செயலென சொல்லும்நிலை. இறந்தவரின் உடலை குப்பை தொட்டியில் எறிந்து தூக்கிசெல்லும் காட்சி பாஜகவின் உ.பி. அரசின் கோர முகத்தை காட்டுகிறது.

அவசரகாலத்திற்கு தயாராகுங்கள் என மோடி சொல்கிறார். எப்போது ஆட்சிக்கு வந்தீர்களோ அன்றிலிருந்து அவசரகால நிலைதான். 20 லட்சம் கோடி என்று அளந்துவிட்டு கடைசியில் ஒருகிலோ கொண்டைக்கடலை கூட கிடைக்காததுதான் மிச்சம். இனி வரும் மாதங்களில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வருமா என சந்தேகம் எழுகிறது. பேரிடர்கால நிதியையும் எடுத்து பெருமுதலாளிகளுக்கு தந்துவிட்டு இனி ஆறுமாதத்திற்கு எந்த திட்டமும் இல்லையென நிதியமைச்சரே கைவிரிக்கிறார். ஆனால் இந்த களேபரத்திலும் இந்தியாவிற்கு பெயர்மாற்றம் செய்யவேண்டுமென்றும் IAS படித்தவர்களுக்கு RSS பயிற்சி வகுப்பெடுக்க தேதி குறித்து செயல்படுவதும் நடக்கிறது.

அரசு அதிகாரிகள் ஏன் RSS கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். இது சட்டவிரோதமென யாரும் கேள்வி எழுப்பவில்லை. OBC /BC இடஒதுக்கீட்டை ரத்து செய்ததை கடந்து செல்கிறோம் பாதிக்கப்படுவது நம் குழந்தைகளின் எதிர்காலமென்று கூட நமக்கு புரிதல் இல்லை. உயர்ஜாதி ஏழைகள் (வருடம் 8 லட்சம் வரை) இடஒதுக்கீடு பெறலாம் ஆனால் OBC ஏன் ரத்தென்றால் அது அடிப்படை உரிமையில்லை என உச்சநீதிமன்ற குரல் கேட்கிறது. இடஒதுக்கீடு அடிப்படை உரிமையென்ற அம்பேத்கரின் சொல்லை நீதிமன்றம் மறுத்திருக்கிறது.

ஒரே தேசம் என்ற கொள்கையில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்த மக்கள் (இடைசாதிக்காரன்) வாழ வழியில்லை. நாடு உயர் ஜாதியினருக்கானது என்பதை உன்னை கொண்டே சொல்லவைக்கிற அவலம். க்ஷ்… பலமொழி கலாச்சார பண்பாடு கொண்ட தேசத்தில் மிகப்பெரிய புரட்சிக்கு வழிவகுக்கும்
மிக மோசமான ஆட்சி நீண்டகாலம் நிலைக்காது. அதிகாரமிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற ஆடுகிறார்கள். மிகப்பெரிய சேதத்தை தேசத்திற்கு தருவார்கள்.

– ஆலஞ்சியார்